ரெட்புல் கோ கார்ட் ரேஸிங் பந்தயம் இந்தியாவில் அறிமுகம்: முழு விபரம்!

கார் பந்தய கனவுடன் காத்திருக்கும் இளம் வீரர்களை இனம் கண்டு ஊக்குவிக்கும் விதத்தில், கோ கார்ட் பந்தயத்தை ரெட்புல் நிறுவனம் நடத்துகிறது. இந்த போட்டிக்கான அறிமுக நிகழ்வு நேற்று மும்பையில் நடந்தது. இந்த

By Saravana Rajan

கடந்த வாரம் இந்தியாவில் கோ கார்ட் பந்தயத்தை துவங்க இருப்பதாக ரெட்புல் நிறுவனம் அறிவித்தது. அதன்படி, இந்த பந்தயத்தின் அறிமுக நிகழ்வு நேற்று மும்பையில் நடந்தது. இந்த பந்தயம் தொடர்பான விரிவான தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ரெட்புல் கோ கார்ட் ரேஸிங் பந்தயம் துவங்கியது: முழு விபரம்!

கார் பந்தயத்தில் ஆர்முடையவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில், இந்த கோ கார்ட் பந்தயத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ரெட்புல் நிறுவனம். இந்த அறிமுக விழா நிகழ்ச்சியில், பிரபல கார் பந்தய வீராங்கனை மிரா எர்டா கலந்து கொண்டார்.

ரெட்புல் கோ கார்ட் ரேஸிங் பந்தயம் துவங்கியது: முழு விபரம்!

மும்பையின் லோயர் பரேல் பகுதியில் உள்ள ஸ்மாஷ் ஸ்போர்ட்ஸ் மற்றும் என்டர்டெயின்மென்ட் மையத்தில் இந்த விழா நடந்தது. இந்த போட்டியில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெப்கேமரா மூலமாக புகைப்படத்தையும், சுய விபரங்களையும் பதிவு செய்து கொண்டு போட்டியில் பங்கு பெறலாம்.

ரெட்புல் கோ கார்ட் ரேஸிங் பந்தயம் துவங்கியது: முழு விபரம்!

பந்தய களத்தில் விரைவாக சுற்றுக்களை முடிப்பவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும் ஆகஸ்ட் செப்டம்பர் மாதத்தில் மும்பை மற்றும் குர்கானில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

ரெட்புல் கோ கார்ட் ரேஸிங் பந்தயம் துவங்கியது: முழு விபரம்!

இந்த போட்டியில் பங்குபெற்று மிக விரைவாக சுற்றுகளை நிறைவு செய்யும் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் மற்றொரு தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்க வேண்டும். அதில், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் போட்டியாளர்கள், ரெட்புல் நடத்தும் தேசிய அளவிலான கோ கார்ட் பந்தயத்தில் பங்கு பெற தகுதியுடையவர்களாக தேர்வுசெய்யப்படுவர்.

ரெட்புல் கோ கார்ட் ரேஸிங் பந்தயம் துவங்கியது: முழு விபரம்!

இறுதிப் போட்டி பெங்களூரில் உள்ள மெகோ கார்டோபியா மையத்தில் நடைபெற இறுக்கிறது. இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர் அபுதாபியில் நடைபெற இருக்கும் ஃபார்முலா-1 கார் பந்தயத்தை நேரில் கண்டு களிப்பதற்கான வாய்ப்பை ரெட்புல் நிறுவனம் வழங்க இருக்கிறது.

ரெட்புல் கோ கார்ட் ரேஸிங் பந்தயம் துவங்கியது: முழு விபரம்!

கார் பந்தயத்தில் திறமையானவர்களை இனம் கண்டு ஊக்கப்படுத்தும் விதத்தில், இந்த கோ கார்ட் பந்தயத்தை ஊட்டச்சத்து பான நிறுவனமான ரெட்புல் நடத்துகிறது. இது நிச்சயமாக இளைய தலைமுறை பந்தய வீரர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary
Red Bull India had earlier this week announced the launch of the Red Bull Kart Fight, a kart racing competition to help find the fastest amateur kart racer in India. 18 July was when the first edition of the competition was scheduled to begin.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X