புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி எப்போது அறிமுகமாகிறது? - விபரம்!

Written By:

காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் முதலாவதாக இந்தியாவில் அறிமுகமான ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிக்கு கிடைத்த வரவேற்பு அறிந்ததே. அதன்பிறகு, தொடர்ந்து பல புதிய மாடல்கள் இந்த செக்மென்ட்டில் வரிசை கட்டின.

புதிய மாடல்கள் வந்தாலும், டஸ்ட்டர் எஸ்யூவிக்கு இந்தியர்கள் மத்தியில் தொடர்ந்து சீரான வரவேற்பு இருந்து வருகிறது. இந்த வெற்றியை ருசித்த உற்சாகத்தில், ரெனோ கார் நிறுவனம் அடுத்து கேப்டூர் எஸ்யூவி மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. இது முழுமையான எஸ்யூவியாக இல்லாமல், க்ராஸ்ஓவர் ரக மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய எஸ்யூவி மாடல் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாகவே இந்தியாவில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் ஏலகிரியில் வைத்து சோதனை செய்யப்பட்ட படங்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் பார்த்திருப்பீர்கள்.

இந்த நிலையில், இந்த புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி எப்போது அறிமுகமாகிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய எஸ்யூவி வரும் என்று சொல்லப்பட்டு வந்தது.

இந்தநிலையில், வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே இந்த புதிய மாடலை களமிறக்க ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரெனோ கேப்டூர் எஸ்யூவி வெளிநாடுகளில் இடதுபுற ஸ்டீயரிங் வீல் அமைப்பு கொண்டதாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முதல்முறையாக வலது பக்க ஸ்டீயரிங் வீல் அமைப்பு கொண்ட கேப்டூர் எஸ்யூவி இந்தியாவில்தான் அறிமுகமாக இருக்கிறது. டஸ்ட்டர் எஸ்யூவி உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய எஸ்யூவி மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோன்று, டஸ்ட்டர் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில்தான் இந்த புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவியும் விற்பனைக்கு வர இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், இரட்டை வண்ண இன்டீரியர், கருப்பு வண்ண கூரை உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கும். இந்த எஸ்யூவியில் 7 இன்ச் டச்ஸ்கிரீனுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும்.

டஸ்ட்டர் எஸ்யூவியைவிட விலை அதிகமான மாடலாக வர இருக்கிறது. விலை மற்றும் சிறப்பம்சங்கள் அடிப்படையில், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு போட்டியாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பு.

மேலும்... #ரெனோ #renault
English summary
The Renault Captur is a crossover SUV and will be launched in India during this festive season.
Story first published: Saturday, July 15, 2017, 12:11 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos