ஏலகிரியில் புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி சோதனை ஓட்டம்- படங்கள்!

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவியின் ஸ்பை படங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி மிக தீவிரமான சாலை சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் இந்த புதிய எஸ்யூவி மாடல் ஏலகிரியில் வைத்து சோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த படங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

ஏலகிரியில் புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி சோதனை ஓட்டம்- படங்கள்!

கடந்த ஆண்டு முதலே ரெனோ கேப்டூர் எஸ்யூவி இந்தியாவின் பல பகுதிகளில் வைத்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு காஷ்மீரில் வைத்து சோதனை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் ஆட்டோமொபைல் இணையதளங்களில் வெளியாகின.

ஏலகிரியில் புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி சோதனை ஓட்டம்- படங்கள்!

இந்த நிலையில், தற்போது தமிழகத்திலுள்ள ஏலகிரியில் வைத்து இந்த புதிய எஸ்யூவி சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட ஸ்பை படங்கள் கிடைத்துள்ளன. டஸ்ட்டருக்கு கிடைத்த வரவேற்பை மனதில் வைத்து அடுத்ததாக இந்த புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி இந்தியாவில் களமிறக்க உள்ளது ரெனோ கார் நிறுவனம்.

ஏலகிரியில் புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி சோதனை ஓட்டம்- படங்கள்!

ரெனோ டஸ்ட்டர் உருவாக்கப்பட்ட அதே பி0 பிளாட்ஃபார்மில்தான் புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியைவிட விலை அதிகமான ரகத்தில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஏலகிரியில் புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி சோதனை ஓட்டம்- படங்கள்!

புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவியில் 102 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். டஸ்ட்டர் போன்றே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இருவிதமான சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்ட மாடல்களில் கிடைக்கும். ஒரு மாடல் 83.8 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மற்றொரு மாடல் 108.4 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஏலகிரியில் புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி சோதனை ஓட்டம்- படங்கள்!

பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் அள்லது சிவிடி கியர்பாக்ஸ் மாடல்களிலும், டீசல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலகிரியில் புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி சோதனை ஓட்டம்- படங்கள்!

டீசல் மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் தேர்விலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் ரெனோ கேப்டூர் கிடைக்கிறது. இந்த எஞ்சின் ஆப்ஷனை இந்தியாவில் ரெனோ கார் நிறுவனம் அறிமுகப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

ஏலகிரியில் புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி சோதனை ஓட்டம்- படங்கள்!

ரெனோ கேப்டூர் எஸ்யூவியில் எல்இடி பகல்நேர விளக்குகளுடன் கூடிய ஹெட்லைட் அமைப்பு, பனி விளக்குகளுக்கு பதிலாக எல்இடி விளக்குகள் இடம்பெற்றிருக்கின்றன. கருப்பு வண்ண இன்டீரியர் இடம்பெற்றிருக்கும் என்பது ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வருகிறது.

ஏலகிரியில் புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி சோதனை ஓட்டம்- படங்கள்!

புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி 4,333 மிமீ நீளமும், 1,813மிமீ அகலமும், 1,613 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கும். இந்த கார் 2,673மிமீ வீல் பேஸ் கொண்டதாக வருகிறது. காருக்கும், தரைக்குமான கிரவுண்ட் கிளிரயன்ஸ் 205மிமீ என்று தெரிய வருகிறது. இந்த காரில் 387 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி இருக்கும்.

ஏலகிரியில் புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி சோதனை ஓட்டம்- படங்கள்!

இந்த ஆண்டு இறுதியில் புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரியால் எஸ்யூவி கார்களின் விலையில் கணிசமாக குறைந்துள்ளதால், தீபாவளிக்கு முன்னதாக இந்த காரை ரெனோ அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ரூ.10 லட்சம் விலையில் புதிய ரெனோ கேப்டூர் விற்பனைக்கு வரும் என்பது கணிப்பு.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
These exclusive images of the Renault Captur caught testing while fully camouflaged, have been taken at Yelagiri Hills, in the south of India.
Story first published: Thursday, July 13, 2017, 16:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X