இந்தியாவில் 2017 ரெனால்ட் டஸ்டர் பெட்ரோல் மாடல் கார் ரூ.8.46 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்.

Written By:

மேம்படுத்தப்பட்ட ரெனால்ட் நிறுவனத்தின் டெஸ்டர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரூ. 8.49 லட்சம் ஷோரூம் விலையில் அறிமுகமாகியுள்ள இந்த காரில் எஞ்சின் மற்றும் தானாக இயங்கம் கொண்ட ஆகியவை புதியதாக இடம்பெற்றுள்ளன. 

2017 ரெனால்ட் டஸ்டர்

புதிய மேம்படுத்தப்பட்டுள்ள ரென்லாட் காரில் 1.5 லிட்டர் திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சின் மாடல் உள்ளது. மேலும், முதன்முறையாக இந்த மாடல் ஆட்டோமேடட் கியர் பாக்ஸ் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் எஞ்சின் கொண்டு இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள ரெனால்ட் டஸ்டர் மாடல் அனைத்தும் 2 சக்கர ஓட்ட முறையிலேயே இயங்கும் தொழில்நுட்பத்தை பெற்றுள்ளது. 

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ள 2017 ரெனால்ட் டஸ்டர் பெட்ரோல் காரின் விலைப்பட்டியல்.

மாடல்கள் ஷோரூம் விலை (டெல்லி) ஷோரூம் விலை (மும்பை) ஷோரூம் விலை (கொல்கத்தா) ஷோரூம் விலை (சென்னை)
டஸ்டர் ஆர்.எக்ஸ்.இ ரூ. 8,49,575  ரூ. 8,86,041  ரூ. 8,80,823  ரூ. 8,68,727 
டஸ்டர் ஆர்.எக்ஸ்.எல் ரூ. 9,30,215  ரூ. 9,67,434  ரூ. 9,61,463  ரூ. 9,49,367 
டஸ்டர் ஆர்.எக்ஸ்.எஸ். சிவிடி ரூ. 10,32,215   ரூ. 10,69,434  ரூ. 10,63,463  ரூ. 10,51,367 

திறன் மற்றும் மைலேஜ்

2017 ரெனால்ட் டஸ்டர் காரின் 1.5 லிட்டர் திறன் கொண்ட எஞ்சின் உள்ளது. இது 104.5 பி.எச்.பி பவர் மற்றும் 142 என்.எம் டார்க் திறன் வழங்கும்.

மேனுவல் மற்றும் சி.வி.டி ஆகியவற்றில் இயங்கும் கியர் பாக்ஸ் மாடல்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.

 

பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுயிருக்கும் மேம்படுத்தப்பட்டுள்ள ரெனலாட் டஸ்டர் காரில், மேனுவல் கியர் பாக்ஸ் மூலம் ஒரு லிட்டரில் 14.19 கிலோ மீட்டர் மைலேஜ் நமக்கு கிடைக்கும்.

இதே பெட்ரோல் கொண்டு இயங்கும் மாடலில். சி.வி.டி கியர்பாக்ஸ் கொண்டுயிருந்தால், அதன் மூலம் வாடிக்கையாளருக்கு 1 லிட்டர் மூலம் 14.99 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும்.

ரெனால்ட் டஸ்டர் காரின் சிறப்பு அம்சங்கள்

மற்ற மாடல்களிலிருந்து தனித்துவமான அடையாளம் பெற இந்த காரின் தோற்றத்தில் பல புதிய வடிவமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காரின் முன்பகுதியில் இருக்கும், டுயல்-டோன் பம்பர், திடமான கிரில் அமைப்பு போன்றவை இந்த எஸ்.யூ.வி மாடல் காருக்கு மிரட்டலான ஒரு ஈர்ப்பை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்துகிறது.

மேலும் சி.வி.டி கியர்பாக்ஸ் கொண்ட கார்களின் தோற்றத்தை மேலும் மெருகேத்த, அந்த மாடலில் அலாய் சக்கரங்கள் இடம்பெற்றுள்ளன. இதுவும் பார்பவர்களை ஈர்க்கிறது.

பெட்ரோல் மாடலில் இயங்கும் மேம்படுத்தப்பட்ட புதிய ரெனால்ட் டஸ்டர் காரின், பக்கவாட்டில் ஏர்-பேக் அமைப்புகள் உள்ளன.

மேலும், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஆபத்துக் காலத்தில் செயல்படக்கூடிய தானியங்கி பிரேக் அமைப்பு (ABS) மற்றும் மின்னணு பிரேக் செயல்பாடு முறை (EBD) போன்ற தொழில்நுட்பங்களும் இந்த காரில் பிரத்யேகமாக இடம்பெற்றுள்ளன.

இதேபோன்று சி.வி.டிக்கான மேம்படுத்தபட்ட டஸ்டர் மாடலில் பயணிகளுக்கான பகுதியில் மேலும் ஒரு ஏர்-பேக் வசதி உள்ளது.

கூடுதலாக காரின் செயல்திறனை பாதிக்காதவாறு மின்னணு உறுதிப்பாடு திட்டம் (ESP ) மற்றும் கீழிறக்க சாலைகளில் காரை பத்திரமாக இயக்க உதவும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் தொழில்நுட்பம் ஆகியவை இந்த மாடல் காரில் இடம்பெற்றுள்ளது.

 

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
2017 Renault Duster launched in India. The 2017 Renault Duster features a new engine along with a new CVT gearbox
Please Wait while comments are loading...

Latest Photos