ரூ.85 கோடி மதிப்பில் உலகிலேயே விலை உயர்ந்த காரை தயாரித்த ரோல்ஸ்-ராய்ஸ்: ஆச்சர்ய தகவல்கள்!!

Written By:

ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்வெப்டெய்ல் கார், சுமார் 12 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் 85 கோடி) விற்பனை ஆகியுள்ளது.

இதன்மூலம் உலகிலேயே அதிக பொருட்செலவில் தயாரான கார் என ரோல்ஸ்-ராய்ஸ் ஸ்வெப்டெய்ல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டில் தனியார் உணவகம் ஒன்றில் நடைபெற்ற கார் கண்காட்சியில் ரோல்ஸ்-ராய்ஸின் ஸ்வெப்டெய்ல் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டது.

உரிமையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப 1920, 1930களில் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் வெளியிட்ட மாடல்களில் இருந்து புதிய ஸ்வெப்டெய்ல் காரை அந்நிறுவனம் தயாரித்துள்ளது.

கூப் மாடலில் தயாரான இந்த காரை அதன் உரிமையாளர் பெருமையுடன் அந்த கண்காட்சியில் அறிமுகம் செய்து வைத்தார்.

1925ம் ஆண்டில் வெளியான ஃபான்ந்தம் காரில் இருந்தது போல புதிய ஸ்வெப்டெய்ல் காருக்கான கதவுகள் வடிவமைப்பட்டுள்ளன.

இதனுடைய பின்புற வடிவமைப்பு 1934ல் வெளியான மற்றொரு ஃபான்ந்தம் 2 மாடலை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் காரின் மேற்கூரை, உட்புற கட்டமைப்புகள் என அனைத்தும் 1934ல் வெளியான ஃபான்ந்தம் 2 காரை வைத்தே தயாரிக்கப்பட்டுள்ளன.

ஸ்வெப்டெய்ல் காரில் கிரில் ஃபான்ந்தியான் மாடலில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. காரில் வெளியே தெரியக்கூடிய அனைத்து மெட்டல் தோற்றங்களும் அலுமனியம் கொண்டு பாலிஷ் செய்யப்பட்டுள்ளது.

காரின் கேபின் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு சாதரண முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பார்த்து பார்த்து ராயல் ப்ளூ நிறத்தில் ரோல்ஸ்-ராய்ஸ் வடிவமைத்த இந்த காரின் முழு கட்டமைப்புகள் முடிய 2 வருடங்கள் ஆனது.

ஆனால் ஸ்வெய்டெய்ல் காருக்கான முதற்கட்ட வடிவமைப்பு பணிகள் 2013ம் ஆண்டிலேயே ரோல்ஸ்-ராய்ஸ் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த காரில் மேற்கொள்ளப்பட்ட கஸ்டமைஸ் விவரங்கள் குறித்து எந்த தகவலையும் தற்போது வரை ரோல்ஸ்-ராய்ஸ் வெளியிடவில்லை.

ரோல்ஸ்-ராய்ஸ் மோட்டார்ஸின் தலைமை அதிகாரியான டார்ஸ்டான் முல்லர் "ஸ்வெப்டெய்ல் உண்மையிலேயே அற்புதமான கார், இன்ப சுற்றுலா, நீண்ட தூர பயணங்கள் இதில் மேற்கொண்டால், ஸ்வெய்டெய்ல் காருடன் பயணிகள் காதல் கொள்வர்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
Rolls Royce Revealed world's Most expensive sold private car Sweptail. Click for Mind blowing Specifications..
Please Wait while comments are loading...

Latest Photos