மேட் பிளாக் ஃபினிஷில் பல் இளித்த ரோல்ஸ்ராய்ஸ் கார்

Written By:

1965 முதல் 1980ம் ஆண்டு முதல் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளில் பிரபலமாக இருந்த சில்வர் ஷேடோ என்ற காரை ஐரோப்பாவின் நிறுவனம் ஒன்று கஸ்டமைஸ் செய்துள்ளது. இது ஆட்டோமொபைல் உலகில் எதிர்மறையான வரவேற்பை பெற்றுள்ளது. 

1965ல் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட இந்த மாடல் பல்வேறு வடிவங்களில் அக்காலத்தில் உருவாக்கப்பட்டு விற்பனையில் வரலாறு படைத்தது.

லண்டனில் இயங்கி வரும் 'பிரிந்திவிலே' என்ற நிறுவனம் கார்களை கஸ்டமைஸ் செய்வதில் உலகளவில் முன்னணியாக இருந்து வருகிறது.

தற்போது ’பிரிந்திவிலே’ நிறுவனம், தனிநபரின் தேவையை கருதி, 1970களில் புகழ்பெற்றிருந்த ஒரு ரோல்ஸ்-ராய்ஸ் சில்வர் ஷேடோ காரை கஸ்டமைஸ் செய்துள்ளது.

ஆடம்பர வசதிகளுக்கு ஏற்றவாறு புகழின் உச்சியில் இருந்த இந்த காரின் வடிவத்தை மாற்றி தற்போது, சாதரணமாக நாம் பார்க்கும் ஒரு மாடல் போன்று பிரிந்திவிலே நிறுவனம் வடிவமைத்துள்ளது.

முற்றிலும் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு மேட் ஃபினிஷிங் கொண்டு இதனுடைய வடிவமைப்பு முடிக்கப்பட்டு இருக்கிறது.

கஸ்டமைஸ் செய்யப்பட்டு பிறகு இணையத்தில் வெளியான இந்த காரின் படங்கள், ஏனோ சரியான வரவேற்பு பெறவில்லை. குறிப்பாக பல்வேறு விமர்சனங்கள் இந்த கார் மீது எழுப்பப்பட்டுள்ளது.

ஒரு ஆடம்பர நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த காரை, சாதரண மாடலாக மாற்றப்பட்டுள்ளது ரோல்ஸ்-ராய்ஸ் ரசிகர்களிடம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக காரின் உட்புற பகுதிகளில், சிவப்பு நிற லெதர் தோல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிறம் என்பது ரோல்ஸ்-ராய்ஸ் காரின் நிறம் கிடையாது என்றும் அதற்கு ரோல்ஸ்-ராய்ஸ் ரசிகர்களிடம் விமர்சனம் எழுந்துள்ளது.

இதுகுறித்து போரிங் என்று குறிப்பிட்டுள்ள பலர், கியருடன் பொருத்தப்பட்டு இருக்கும் பிரேக் அமைப்புகளை பற்றி நகைச்சுவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த கஸ்டமைஸ் மாடலை குறித்து ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனமும் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், சில்வர் ஷேடோ காரின் வெளிப்புறத்தோற்றம் அபாயகரமான மேற்பரப்பை கொண்டுள்ளதாக ரோல்ஸ்-ராய்ஸ் தெரிவித்துள்ளது.

பிரிந்திவில்லே நிறுவனம் கஸ்டமைஸ் செய்துள்ள ரோல்ஸ்-ராய்ஸ் சில்வர் ஷேடோ காரில் 6.75 லிட்டர் வி8 எஞ்சின் உள்ளது. இது 187 பி.எச்.பி பவர் வழங்கும் திறன் கொண்டது.

இந்த மாடல் காரின் எஞ்சின் ஜெனரல் மோட்டார் நிறுவனத்தின் டர்போ ஹைட்ராமேட்டிக் டிரான்மிஷனுடன் பொருத்தப்பட்டுள்ளது.

பிரிந்திவில்லே நிறுவனம் கஸ்டமைஸ் செய்துள்ள ரோல்ஸ்-ராய்ஸ் சில்வர் ஷேடோ சில அதிகப்படியான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.

தனிநபருக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் கார் 99,995 யூரோவாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா ரூபாயில் இதன் மதிப்பு ரூ,83 லட்சம்.

English summary
Prindiville UK has customised a 1979 Rolls-Royce Silver Shadow in Matte Black with a Custom Red Leather Interior which featured in National Geographic's Supercar Megabuild.
Please Wait while comments are loading...

Latest Photos