சுங்கச் சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த அவசியமில்லை!

சுங்கச் சாவடிகளில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க நேர்ந்தால், கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதில் அளித்துள்ளத

By Saravana Rajan

சுங்கச் சாவடிகளில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கும் அவசியம் ஏற்பட்டால், கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

சுங்கச் சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த அவசியமில்லை!

தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் உபயோகிப்பாளர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக, தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட தொலைவுகளில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.வாகனத்தின் வகை மற்றும் தூரத்தை பொறுத்து இந்த சுங்கச் சாவடிகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது.

சுங்கச் சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த அவசியமில்லை!

இந்த நிலையில், சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவற்காக வாகனங்கள் வரிசை கட்டுவதால் வாகன ஓட்டிகளுக்கும், பயணிப்போருக்கும் அதிக கால விரயம் ஏற்படுகிறது. குறிப்பாக, வார இறுதி நாட்களில் வாகன ஓட்டிகள் சுங்கச் சாவடிகளில் நிற்பதே பெரும் தலைவலியாக மாறிவிடுகிறது.

சுங்கச் சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த அவசியமில்லை!

சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் மற்றும் வசூல் முறை குறித்து பஞ்சாப் மாநிலம், லூதியானாவை சேர்ந்த வழக்கறிஞர் ஹரி ஓம் ஜிண்டால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் கேட்டு மனு செய்தார்.

சுங்கச் சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த அவசியமில்லை!

இந்த மனுவிற்கு பதில் அளித்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுங்கச் சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு வரி இல்லை என்றும், அது சேவை கட்டணமாகவே அது வசூலிக்கப்படுவதாக பதில் அளித்துள்ளது.

சுங்கச் சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த அவசியமில்லை!

மேலும், சுங்கச் சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் வாகனத்தில் காத்திருப்பவர்கள் சுங்கக் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கச் சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த அவசியமில்லை!

இந்த நிலையில், இந்த விதியை நடைமுறையில் பின்பற்றுவதிலும் பல சிக்கல்கள் இருக்கின்றன. இந்த விதி முறையாக அமலுக்கு கொண்டு வரப்படுவதுடன், இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம்.

Most Read Articles
English summary
A reply to an RTI application filed by a Ludhiana-based advocate has recently been doing the rounds on various social media platforms. The advocate - Hariom Jindal had filed for the Right To Information (RTI) last year because of inconvenience caused to him and many other commuters, but the post is going viral almost a year later.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X