மேம்படுத்தப்பட்ட புதிய ஸ்கோடா 2017 ஆக்டேவியா கார் விரைவில் அறிமுகம்

புதிய 2017 ஆக்டேவியா காரை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது ஸ்கோடா நிறுவனம். அது குறித்த தகவல்களை காணலாம்.

Written By:

பிரபல ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகனின், துணை நிறுவனமான ஸ்கோடா, சொகுசுக் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. உலகம் முழுவதுமுள்ள சொகுசு கார் பிரியர்களால், ஸ்கோடா கார்கள் பெரிதும் விரும்பப்படுகிறது. ரேபிட், சூப்பர்ஃப், யெட்டி மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது புதிய மேம்படுத்தப்பட்ட ஆக்டேவியா காரை இந்தியவில் அறிமுகப்படுத்த உள்ளது ஸ்கோடா.

சர்வதேச சந்தையில் புதிய ஆக்டேவியா காரை ஏற்கெனெவே அறிமுகப்படுத்தியுள்ளது ஸ்டோடா நிறுவனம். புதிய 2017 ஆக்டேவியாவின் முகப்பு தோற்றம் புதிதாக மாற்றம் கண்டுள்ளது. இந்த புதிய ஆக்டேவியா வரும் ஜூன் மாதம் முதல் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2017 ஆக்டேவியாவின் முகப்பு கிரில் அமைப்பு மற்றும் பம்பர் ஸ்டைலிஷாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் க்வாட் ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளது. பக்கவாட்டில் ஷார்ப் லைன்கள் தரப்பட்டுள்ளது, இந்த காருக்கு கவர்ச்சிகரமான தோற்றத்தை தருகிறது. மேலும் ரியர் லைட்டுகள் மற்றும் பம்பரும் ரீடிசைன் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஸ்கோடாவின் உட்புறத்தில் எந்த மாற்றமும் இல்லை. எனினும், சர்வதேச சந்தையில் கிடைக்கும் ஆக்டேவியாவில் 9.2 இஞ்ச் டச்ஸ்கிரீன் கொண்ட ஸ்கோடாவின் பிரத்யேக கொலம்பஸ் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கிடைக்கும் ஆக்டேவியா வெர்ஷனில் அப்டேட் செய்யப்பட்ட ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ ஸ்மார்ட்போன் சப்போர்ட் செய்யக்கூடிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் இருக்கும்.

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய ஸ்கோடா ஆக்டேவியாவின் இஞ்சினில் எவ்வித மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கிடைக்கக்கூடிய அதே பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்சின்கள் தான் புதிய ஆக்டேவியாவிலும் இடம்பெரும்.

ஆக்டேவியாவில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் வேரியண்ட் உள்ளது. 1.4 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டார் மற்றும் 1.6 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டார் என இரண்டு பெட்ரோல் வேரியண்டுகளும், 2.0 லிட்டர் இஞ்சின் கொண்ட டீசல் வேரியண்டும் உள்ளது.

ஆக்டேவியாவில் அடேப்டிவ் ஃபிரண்ட் லைட்கள், 8 ஏர் பேக்குகள், பார்க்கிங் அஸிஸ்ட் சிஸ்டம், டிஎஸ்ஜி ஆடோமேடிக் கியர் பாக்ஸ், பனோரமிக் எலெக்ட்ரிக் சன் ரூஃப், டிரைவர் சீட்டினை 12 வழிகளில் எலெக்ட்ரிக் முறையில் மாற்றியமைத்துக்கொள்ளும் வசதி என பல சிறப்பம்சங்கள் உள்ளது. இவை 6 வண்ணங்களில் கிடைக்கிறது.

ஸ்கோடா நிறுவனம், ஆற்றல் மிகுந்த புதிய ஆக்டேவியா விஆர்எஸ் என்ற மாடலையும் அறிமுகப்படுத்த உள்ளது. இதில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 23. பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும். இது தீபாவளி பண்டிகையையொட்டி அறிமுகப்படுத்தப்படும்.

ஸ்கோடா சூப்பர்ப் காரின் படங்கள்:

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Monday, March 13, 2017, 10:47 [IST]
English summary
The 2017 Skoda Octavia has a new quad headlamp arrangement and a slightly revamped front grille and front bumper.
Please Wait while comments are loading...

Latest Photos