விற்பனையில் சோபிக்காவிட்டாலும், சோடையில்லாத டாப் - 10 கார்கள்!

கார் நிறுவனங்களின் கொள்கைகளால் விற்பனையில் சோபிக்காமல் பின்தங்கி விடுகின்றன. ஆனால், அவை தனித்துவ அம்சங்களுடன் தனி வாடிக்கையாளர் வட்டத்தை பெற்றிருக்கின்றன.

By Saravana Rajan

Recommended Video

Off-Roading We Go With Mahindra Adventure - DriveSpark

கார் நிறுவனங்களின் சில தவறான அணுகுமுறைகள் மற்றும் விற்பனைக் கொள்கைகளால் நல்ல தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் ஒதுக்குவதால், விற்பனையில் சோபிக்காமல் தவிக்கின்றன. விற்பனையில் சோபிக்காவிட்டாலம், சில தனித்துவ அம்சங்களால் இந்த கார்கள் தனி வாடிக்கையாளர் வட்டத்தையும், ரசிகர்களையும் பெற்றிருக்கின்றன. அதுபோன்று, தனித்துவம் படைத்த 9 கார் மாடல்களின் விபரங்களை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

 01. ஃபியட் புன்ட்டோ எவோ

01. ஃபியட் புன்ட்டோ எவோ

ஃபியட் கார்களுக்கு என தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஃபியட் கார்களின் வடிவமைப்பு, செயல்திறன் மிக்க எஞ்சின், தரமான கட்டமைப்பு போன்றவையே இதற்கு காரணங்களாக இருக்கின்றன. அதேநேரத்தில், ஃபியட் நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவை, சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட காரணங்களால் வாடிக்கையாளர்களை கவரவில்லை. குறிப்பாக, பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களில் சிறந்த தேர்வாக இருக்கும் ஃபியட் புன்ட்டோ காரின் விற்பனை கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில் இருந்து வருகிறது.

 சோபிக்காவிட்டாலும், சோடையில்லாத டாப் - 10 கார்கள்!

ஃபியட் புன்ட்டோ காரின் வலுவான கட்டமைப்பு கூடுதல் சிறப்பம்சம். அதேபோன்று, செயல்திறன் மிக்க பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஃபியட் புன்ட்டோ காரின் வடிவமைப்பும் பலரை கவர்ந்த ஒன்றாக இருக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் 67 பிஎச்பி பவரையும், டீசல் மாடலில் இருக்கும் 1.3 லிட்டர் எஞ்சின் 75 பிஎச்பி பவரையும் அளிக்கும். டீசல் மாடல் லிட்டருக்கு 21 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. ரூ.4.67 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கிறது. விற்பனைக்கு பிந்தைய சேவையின் தரத்தையும், சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும் என்பதே ஃபியட் ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு.

02. ஃபோர்டு ஃபிகோ

02. ஃபோர்டு ஃபிகோ

முதலாம் தலைமுறை ஃபோர்டு ஃபிகோ கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்ததுடன், விற்பனையிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால், புதிய தலைமுறை ஃபோர்டு ஃபிகோ கார் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இருப்பினும், ஹேட்ச்பேக் ரகத்தில் மிகச் சிறந்த தேர்வாக கூறலாம். டிசைன், வசதிகள், எஞ்சின் ஆப்ஷன் மட்டுமின்றி, பாதுகாப்பு அம்சங்களிலும் சிறப்பாக இருக்கிறது.

 சோபிக்காவிட்டாலும், சோடையில்லாத டாப் - 10 கார்கள்!

புதிய ஃபோர்டு ஃபிகோ கார் 87 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 110 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 99 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அவசர கால உதவி நுட்பம் போன்ற பல சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. ரூ.4.47 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

 03. நிஸான் டெரானோ

03. நிஸான் டெரானோ

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ரீபேட்ஜ் மாடலாக வெளியிடப்பட்ட மாடல். ரெனோ- நிஸான் கூட்டணி நிறுவனங்களின் ஒப்பந்தப்படி டஸ்ட்டர் எஸ்யூவியைவிட சற்று கூடுதல் விலை வைத்து இந்த எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், டஸ்ட்டர் பெற்ற வரவேற்பு அளவுக்கு டெரானோவுக்கு கிடைக்க வில்லை என்பது துரதிருஷ்டம்.

 சோபிக்காவிட்டாலும், சோடையில்லாத டாப் - 10 கார்கள்!

கஸ்டமைஸ் பிரியர்களுக்கு ஏற்ற சாய்ஸ் நிஸான் டெரானோ எஸ்யூவி. வலிமையான தோற்றம், நம்பகமான எஞ்சின் ஆப்ஷன்கள் போன்றவற்றுடன் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட நிஸான் டெரானோ எஸ்யூவி விற்பனையில் சோபிக்காவிட்டாலும், சோடை இல்லாத மாடலாக கூறலாம். நிஸான் நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவை இந்த எஸ்யூவியின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியதற்கு காரணமாக கருதப்படுகிறது.

04. ரெனோ ஸ்காலா

04. ரெனோ ஸ்காலா

நிஸான் சன்னி காரின் ரீபேட்ஜ் மாடலாக வெளியிடப்பட்டது. அதிக சிறப்பம்சங்களுடன் வந்த ரெனோ ஸ்காலா இடவசதியில் தன்னிகரற்ற மிட்சைஸ் செடான் கார்களில் ஒன்று. ஆனால், இந்த காரின் தோற்றம் வாடிக்கையாளர்களை கவரவில்லை.

 சோபிக்காவிட்டாலும், சோடையில்லாத டாப் - 10 கார்கள்!

அதேநேரத்தில் சவுகரியமான இடவசதி, சிறந்த எஞ்சின்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த கார் கிடைக்கிறது. ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் போன்ற ஜாம்பவான்களுடன் இந்த காரால் போட்டி போட முடியாத நிலைக்கு ரெனோ நிறுவனத்தின் சர்வீஸ் கட்டமைப்பு வசதிகளும், இந்த காரின் தோற்றமும் முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டன.

 05. ஹோண்டா மொபிலியோ

05. ஹோண்டா மொபிலியோ

அதிக எதிர்பார்ப்புடன் களமிறக்கப்பட்ட மாடல். ஆனால், இந்தியாவில் இந்த கார் மிக மோசமான வரவேற்பை பெற்ற மாடல்களின் பட்டியலில் துரதிருஷ்டவசமாக சேர்ந்துவிட்டது. மாருதி எர்டிகாவுக்கு போட்டியாக இறக்கப்பட்டாலும் விலை நிர்ணயத்தில் ஹோண்டா சற்று கோட்டைவிட்டது.

 சோபிக்காவிட்டாலும், சோடையில்லாத டாப் - 10 கார்கள்!

ஆனால்,மாருதி எர்டிகா காரைவிட சற்று கூடுதல் இடவசதி, ஹோண்டா நிறுவனத்தின் தரமான எஞ்சின்கள் ஆகியவை இந்த காருக்கு கூடுதல் வலு சேர்க்கின்றன. ஹோண்டா பிரியர்களையே இந்த காரின் தோற்றம் கவரவில்லை. விலையும் சற்று அதிகம் என்பதும் வாடிக்கையாளர்கள் மாருதி எர்டிகா பக்கம் திசை திரும்பி விட்டனர். இந்த காருக்கு இப்போது கணிசமான டிஸ்கவுன்ட் கொடுக்கப்படுகிறது. எனவே, 7 சீட்டர் காரை விரும்பும் ஹோண்டா பிரியர்கள் இந்த காரை தேர்வு பட்டியலில் வைத்துக் கொள்ளலாம்.

06. செவர்லே க்ரூஸ்

06. செவர்லே க்ரூஸ்

இந்த செக்மென்ட்டிலேயே மிகச் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தும் கார் மாடல் செவர்லே க்ரூஸ். பெர்ஃபார்மென்ஸ் பிரியர்களின் தேர்வில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும் செடான் கார். இந்த காரில் இருக்கும் 164 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பெர்ஃபார்மென்ஸ் பிரியர்களின் நன்மதிப்பை பெற்றது. மிக அதிவேக செயல்திறனை வெளிக்காட்டும் எஞ்சினும் கூட.

 சோபிக்காவிட்டாலும், சோடையில்லாத டாப் - 10 கார்கள்!

தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின் ஆப்ஷன்களை கொண்டிருந்தாலும், செவர்லே நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவை மற்றும் நம்பகத்தன்மை போன்ற விஷயங்களால் இந்த கார் விற்பனையில் பின்னடவை சந்தித்துள்ளது. தற்போது இந்த காருக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுன்ட் பெறும் வாய்ப்பும் இருக்கிறது.

 07. ஃபியட் லீனியா

07. ஃபியட் லீனியா

மிட்சைஸ் செடான் செக்மென்ட்டில் மிகச் சிறந்த மாடலாக இருந்தும் விற்பனையில் பின்தங்கி நிற்கிறது. ஃபியட் நிறுவனத்தின் விற்பனைக் கொள்கைகளே இந்த கார் எடுபடாததற்கு காரணம் என்று ரசிகர்கள் ஏமாற்றம் தெரிவிக்கின்றனர்.

 சோபிக்காவிட்டாலும், சோடையில்லாத டாப் - 10 கார்கள்!

வலுவான கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள், இடவசதி என அனைத்திலும் சிறப்பான தேர்வாக இருக்கும். இந்த காரின் 125 எஸ் மாடல் மிகவும் பவர்ஃபுல் செடான் கார்களில் ஒன்றாகவும் இருக்கிறது. ஃபியட் ரசிகர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற இந்த காருக்கு பிறரின் ஆதரவு வேண்டுமெனில், விற்பனைக்கு பிந்தைய சேவையின் தரத்தை கூட்ட வேண்டியது அவசியமாக கருதப்படுகிறது.

08. மாருதி எஸ் க்ராஸ்

08. மாருதி எஸ் க்ராஸ்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல். ஆனால், எதிர்பார்த்த அளவு விற்பனையில் சோபிக்கவில்லை. அத்துடன், ஹூண்டாய் க்ரெட்டாவின் வரவும் இந்த காருக்கான வரவேற்பை வெகுவாக குறைத்துவிட்டது. 1.3 லிட்டர் ஃபியட் டீசல் எஞ்சினை பயன்படுத்தி வந்த மாருதி கார் நிறுவனம், முதல்முறையாக இந்த காரில் 1.6 லிட்டர் ஃபியட் டீசல் எஞ்சினை பயன்படுத்தியது. இந்த எஞ்சின் 118 பிஎச்பி பவரை அளிக்க வல்லது.

 சோபிக்காவிட்டாலும், சோடையில்லாத டாப் - 10 கார்கள்!

ஆனால், விலையை எகிடுதகிடாக நிர்ணயித்து கையை சுட்டுக் கொண்டது மாருதி. இருப்பினும், நெருக்கடியை தீர்த்துக் கொள்ளும் விதமாக மாருதி எஸ் க்ராஸ் விலையை மாருதி அதிரடியாக குறைத்தது. க்ராஸ்ஓவர் ரகத்தில் சிறப்பான தொழில்நுட்ப அம்சங்கள், தோற்றம், இடவசதி கொண்ட மாடல் மாருதி எஸ் க்ராஸ்.

 09. டாடா சஃபாரி ஸ்டார்ம்

09. டாடா சஃபாரி ஸ்டார்ம்

ஒருநேரத்தில் எஸ்யூவி பிரியர்களின் கனவு பிராண்டாக இருந்தது. ஆனால், தற்போது வரிசை கட்டி நிற்கும் போட்டியாளர்களுக்கு மத்தியில் எடுபடமுடியாமல் திணறி வருகிறது. மிரட்டலான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின் இந்த எஸ்யூவியின் சிறப்பம்சங்கள். அத்துடன், ஆஃப்ரோடு விஷயங்களிலும் கலக்கும்.

 சோபிக்காவிட்டாலும், சோடையில்லாத டாப் - 10 கார்கள்!

இந்த எஸ்யூவியில் இருக்கும் 2.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. தற்போது கடும் சந்தை நெருக்கடி காரணமாக இந்த காருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுன்ட் பெறும் வாய்ப்பும் இருக்கிறது.

2018 வால்வோ வி90 காரின் ஆல்பம்!

இன்று டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகமாகி உள்ள பிரம்மாண்டமான வால்வோ வி90 சொகுசு காரின் படங்கள் சுடச்சுட உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

Most Read Articles
English summary
Some Best Car Models that Nobody Buys.
Story first published: Tuesday, January 10, 2017, 16:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X