ஆயிரக்கணக்கான சொகுசு கார்களின் உற்பத்தியை திடீரென நிறுத்திய பிஎம்டபுள்யூ: காரணம் இதுதான்..!!

Written By:

உதிரிபாகங்களை பெறுவதில் ஏற்பட்டுள்ள திடீர் தடங்கலால் பி.எம்.டபுள்யூ, ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொகுசு கார்களின் தயாரிப்பு பணிகளை முடிக்க முடியாமல் திணறி வருகிறது.

கார்களை தயாரிப்பது என்பது மிக சாவலான காரியம். அதிலும் சொகுசு கார்கள் என்றால் அதிலிருக்கும் சாவல்கள் பன்மடங்கு பெரியது. இதனாலேயே பி.எம்.டபுள்யூ நேரத்தை சரியாக கடைபிடிக்கும்.

வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்களை பெற்ற பிறகே கார்களை தயாரிக்கும் பி.எம்.டபுள்யூ, நேரத்தை பின்பற்றுவதில் ஒரு தொழில்ரீதியான அனுகுமுறையை வைத்துள்ளது.

ஆர்டர்களுக்கு ஏற்றவாறு சரியான திட்டமிடலோடு கார்களை தயாரித்து வந்த பி.எம்.டபுள்யூ மீது இன்று யார் கண்பட்டதோ தெரியவில்லை.

உலகளவில் அந்நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களின் தயாரிப்பு பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.

இத்தாலி நிறுவனத்திடமிருந்து உதிரிபாகங்கள் உரிய நேரத்தில் கிடைக்கததால், கடந்த வெள்ளி முதல் பி.எம்.டபுள்யூ கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ஜெர்மனி, சீனா, தென் ஆஃபிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள அந்நிறுவனத்தின் ஆலைகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொகுசு கார்களின் தயாரிப்பு பணிகள் அப்படியே நிற்கின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பி.எம்.டபுள்யூ குழு உறுப்பினர்களில் ஒருவரான மார்கஸ் டியூஸ்மன் ஒரு சிறு துரும்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டாலும், கார்களின் மொத்த உற்பத்தியையும் அது பாதித்து விடும் என்று கூறினார்.

ஒரு வாரத்தில், பி.எம்.டபுள்யூ உலகளவில் உள்ள தனது தொழிற்சாலைகளில் சுமார் 17,500 கார்களை தயாரிக்கும்.

தற்போது இந்த சிக்கல் காரணமாக, சுமார் 360 கோடி வரை பி.எம்.டபுள்யூ வருமானம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சீனாவில் தயாரிக்கப்படும் பி.எம்.டபுள்யூ 1-4 சிரீஸ் கார்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அதுவே 550 மில்லியன் அமெரிக்கன் டாலர் வரை அந்நிறுவனத்திற்கு வருமான இழப்பை ஏற்படுத்தும்.

இருந்தாலும் வெள்ளி அன்று ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பால் பி.எம்.டபுள்யூ எவ்வளவு மில்லியன் டாலர்கள் வருமானம் இழந்துள்ளது என்று தெரியவில்லை. அதைக்குறித்து அந்நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் பி.எம்.டபுள்யூ-விற்கு உதிரிபாகங்களை அதிகாரப்பூர்வமாக சப்ளை செய்து வருவது பாஷ் நிறுவனம் தான் என்றும், இத்தாலியில் உள்ள அதனுடைய மற்றொரு நிறுவனத்திடம் பாஷ் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வெள்ளி முதல் பி.எம்.டபுள்யூ வின் 1 மற்றும் 2 சிரீஸ் மாடல் கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது, ஆனால் ஐ8 மற்றும் ஐ3 கார்களின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருதாக பி.எம்.டபுள்யூவின் செய்தி தொடர்பாளர் ஜோசின் முல்லர் கூறியுள்ளார்.

இதுபோன்ற சப்ளை தொடர்பான பிரச்சனைகளை பி.எம்.டபுள்யூ வருடத்தில் ஒருமுறையாவது சந்தித்து விடுவது வழக்கம் தான். அதை சமாளிக்கும் முறையையும் அந்நிறுவனம் நன்றாக கற்று வைத்துள்ளது.

பி.எம்.டபுள்யூ-விற்கு முன் வோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு பல ஆர்டர்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பல ஆயிரம் அளவில் உற்பத்தி பாதிப்பை சந்தித்தது.

ஆனால் அந்த நேரத்தில் வோக்ஸ்வேகன் கார்களுக்கு வரவேற்பு அதிகமாக இருந்ததால் பேரிழப்பை சந்திப்பதில் இருந்து அந்நிறுவனம் தப்பித்தது.

உதிரிபாகங்களை பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தீர்க்கப்பட்டு, கார்களின் உற்பத்தி நாளை முதலே தொடங்க அதிக வாய்ப்புள்ளதாக பி.எம்.டபுள்யூ-வின் செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

English summary
Spare Parts Supply Problem hits BMW to Halt the Production at Various Factories around the world. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos