ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்களில் இந்த நிறுவனம் தான் உலகின் நம்பர்-1..!!

Written By:

உலகளவில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்கள் விற்பனையில் ஆடி நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி முதல் இடம் பிடித்துள்ளது சுபாரு நிறுவனம்.

ஜப்பானைச் சேர்ந்த ‘சுபாரு', இந்தியாவில் அதிக பரிட்சயம் இல்லாத ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் என்றாலும் அமெரிக்காவில் சிறந்த விற்பனையில் உள்ள ஒரு பிராண்டாக விளங்கி வருகிறது.

ஜப்பானின் டோக்யோ நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனம் 1953ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது என்றாலும் இந்நிறுவன தயாரிப்புகளில் 75% வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த 2015-2016 நிதி ஆண்டின் காலகட்டத்தில் 1 மில்லியன் ( 10 லட்சம்) ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்களை விற்பனை செய்துள்ள சுபாரு நிறுவனம், இந்த செக்மெண்டில் உலகளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இது பிரபல ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி குவாட்ரோ லைன்-அப் கார்களின் விற்பனை எண்ணிக்கையை விடவும் 2,45,382 கார்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

லாபத்தில் நன்கு இயங்கிவரும் ஜாகுவார், லேண்ட்ரோவர் மற்றும் போர்ஷே ஆகிய நிறுவனங்களையும் பின்னுக்குத்தள்ளி அதிகமான லாப அளவு கொண்ட நிறுவனமாகவும் உயர்ந்து அசத்தியுள்ளது சுபாரு.

சுபாருவின் இந்த புதிய உச்சத்திற்கு அடிப்படையாக அமைந்தது அமெரிக்க சந்தையே ஆகும். ஏனெனில் அமெரிக்கவில் தான் அதிகமான கார்களை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம்.

விற்பனையில் அமெரிக்காவையே அதிகம் சார்ந்துள்ள சுபாரு நிறுவனத்தின் 60% ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கார்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வது குறிப்பிடத்தக்கது.

இதுவரை அமெரிக்காவில் விற்பனையாகியுள்ள 99.3 சதவீத சுபாரு கார்களில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலகின் மற்றொரு பெரிய சந்தையாக கருதப்படும் ஐரோப்பா, சுபாரு நிறுவனத்திற்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

தற்போது கார் ஆர்வலர்களில் பார்வை செயல்திறன் நிரம்பிய கார்கள் மீது திரும்பியிருப்பதால், இதை மையமாக வைத்து சுபாரு நிறுவனம் செயல்பட்டு வருவது தெரிகிறது. இதில் கடுமையாக உழைத்து தற்போது நம்பர்-1 அரியணையையும் அந்நிறுவனம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, June 19, 2017, 15:43 [IST]
English summary
Read in Tamil about subaru tops no.1 in all wheel drive cars in world
Please Wait while comments are loading...

Latest Photos