லிட்டருக்கு 32 கிமீ மைலேஜ் தரும் ஸ்விஃப்ட் கார் ஜப்பானில் அறிமுகம்!

Written By:

லிட்டருக்கு 32 கிமீ மைலேஜ் தரும் சுஸுகி ஸ்விஃப்ட் கார் ஜப்பானில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

எஸ்எச்விஎஸ் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் கூடிய சுஸுகி ஸ்விஃப்ட் கார் ஜப்பானில் விற்பனையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், முழுமையான ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் இயங்கும் சுஸுகி ஸ்விஃப்ட் கார் மாடலும் தற்போது அங்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஹைப்ரிட் மாடல் இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்ப்டடுள்ளது. ஸ்விஃப்ட் ஹைப்ரிட் எம்எல் மற்றும் ஸ்விஃப்ட் ஹைப்ரிட் ஆர்எஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் ஜப்பானில் களமிறக்கப்பட்டு இருக்கிறது.

புதிய சுஸுகி ஸ்விஃப்ட் ஹைப்ரிட் மாடலில் 91 பிஎஸ் பவரை வழங்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர, 10 kW திறன் கொண்ட மின் மோட்டாரும் இந்த காரில் பொருத்தப்பட்டு இறுக்கிறது. 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் அங்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரில் பேடில் ஷிஃப்ட் வசதியும் உண்டு.

குறைந்தபட்ச எடையுடன் செல்லும்போது, இந்த காரில் இருக்கும் ஹைப்ரிட் சிஸ்டம் பெட்ரோல் எஞ்சினை முழுவதுமாக அணைத்துவிட்டு, மின் மோட்டாரில் காரை இயக்கும். அதேநேரத்தில், குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே மின் மோட்டாரில் கார் செல்லும்.

ஜேசி08 சைக்கிள் விதியின்படி, இந்த ஹைப்ரிட் கார் மாடல் லிட்டருக்கு 32 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

அங்கு ஏற்கனவே விற்பனையில் உள்ள சுஸுகி ஸ்விஃப்ட் காருக்கும், இந்த புதிய ஸ்விஃப்ட் ஹைப்ரிட் மாடலுக்கும் வித்தியாசங்கள் அதிகமில்லை. வெளிப்புறத்தில் அடையாளப்படுத்தும் விதத்தில், ஹைப்ரிட் பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

English summary
Suzuki Launches New Swift Hybrid Model in Japan.
Story first published: Friday, July 14, 2017, 17:43 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos