டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை பெங்களூரில் சோதனை ஓட்டம் நடத்த டாடா எல்க்ஸி தீவிரம்!

Written By:

டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி கார்களை தயாரிப்பதில் பல முன்னணி கார் நிறுவனங்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், முதல்முறையாக இந்தியாவில் டிரைவரில்லாமல் இயங்கும் காரை சோதனை ஓட்டம் நடத்தும் முயற்சியை டாடா எல்க்ஸி நிறுவனம் தீவிரமாக இறங்கியிருக்கிறது. டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை பெங்களூரில் சோதனை ஓட்டம் நடத்துவதற்கான முயற்சிகளை டாடா எல்க்ஸி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இதற்காக, அரசிடம் அனுமதியும் கோரியிருக்கிறது. இரண்டு செடான் கார்களில் டிரைவரில்லாமல் இயங்கும் கார்களுக்காக டாடா எல்க்ஸி உருவாக்கி உள்ள தொழில்நுட்பத்தை இணைத்து பரிசோதித்து பார்க்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த இரண்டு செடான் கார்களில் ஒன்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செடான் காராக தெரிவிக்கப்படுகிறது.

இந்த செடான் கார்களில் ஏராளமான சென்சார்கள், கேமரா மற்றும் ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெங்களூரின் புறநகர் பகுதிகளில் இந்த கார்கள் ஏற்கனவே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறதாம். நகர்ப்புற சாலைகளில் சோதனை ஓட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக டாடா எல்க்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே டாடா எல்க்ஸி நிறுவனம் டிரைவரில்லாமல் இயங்கும் காருக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி வந்தது. கடந்த 2014ம் ஆண்டில் டாடா ஸெஸ்ட் காரில் அந்த தொழில்நுட்பத்தை இணைத்து பாதுகாக்கப்பட்ட வழித்தடத்தில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தியது. மேலும், 2015ம் ஆண்டில் தானியங்கி முறையில் பார்க்கிங் செய்வதற்கான தொழில்நுட்பத்தை செயல்விளக்கம் செய்து காட்டியது.

இந்த நிலையில், தற்போது பொது சாலைகளில் வைத்து டிரைவரில்லாமல் இயங்கும் கார்கள் சோதனை ஓட்டம் நடத்துகிறது டாடா எல்க்ஸி நிறுவனம்.

இந்திய சாலைகளில் டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை இயக்குவது சாத்தியமில்லாதது என்று பல முன்னணி கார் நிறுவனங்கள் கருத்து தெரிவித்திருந்தன. இந்த நிலையில், பல சவால்களை கடந்து டாடா எல்க்ஸி நிறுவனம் டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

2017 ஃபோர்டு மஸ்டாங் காரின் படங்கள்!

புதிய ஃபோர்டு மஸ்டாங் காரின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை கீழே உள்ள கேலரியில் சென்று பார்க்கலாம்.

Story first published: Thursday, January 19, 2017, 9:28 [IST]
English summary
The design unit of Tata Motors, the Tata Elxsi is looking to test autonomous car on the roads of Bengaluru and the firm is seeking permission from authorities.
Please Wait while comments are loading...

Latest Photos