டாடா ஹெக்ஸா கார் விபத்தில் சிக்கியது... பயணிகள் பத்திரம்!

கோவையில், டாடா ஹெக்ஸா கார் ஒன்று டெஸ்ட் டிரைவின்போது விபத்தில் சிக்கியது.

Written By:

கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய டாடா ஹெக்ஸா கார் வாடிக்கையாளர்களை கவர்ந்த மாடலாக மாறி உள்ளது. கடந்த மாதத்தில் 1,498 டாடா ஹெக்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்காக, டீலர்களில் டாடா ஹெக்ஸா கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு, கோவையிலுள்ள டாடா டீலருக்கு சொந்தமான டெஸ்ட் டிரைவுக்காக பயன்படுத்தப்பட்ட டாடா ஹெக்ஸா கார் ஒன்று விபத்தில் சிக்கியது.

அந்த கார் மணிக்கு 100 கிமீ வேகத்துக்கும் அதிகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில், அந்த காரின் முன்பகுதியும், வலதுபுறத்தில் பக்கவாட்டிலும் கடுமையாக சேதமடைந்தது.

இருப்பினும், இந்த காரில் இருந்த ஏர்பேக்குகள் கூட விரிவடையாத நிலையில், அந்த காரில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். காரின் சிறந்த கட்டுமானமே, பயணிகள் தப்பியதற்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனெனில், இந்த கார் 2,280 கிலோ எடை கொண்டது. போட்டியாளர்களான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் 1,855 கிலோ எடையும், மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் 1,785 கிலோ எடை கொண்டிருக்கும் நிலையில், டாடா ஹெக்ஸா காரின் வலிமையான கட்டுமானத்தினால்தான் அதிக எடையை பெற்றிருக்கிறது.

வலிமையான கட்டுமானத்தின் மூலமாக, இந்த விபத்தில் அதிக சேதம் ஏற்படாமல், பயணிகளை காத்துள்ளதாக கருதப்படுகிறது. டாடா டியாகோ காரும் விற்பனைக்கு அறிமுகமான புதிதில், ஊட்டி அருகே கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கியது. அப்போது, அந்த காரும் குறைவான சேதத்துடன் தப்பியது.

காரில் இருந்தவர்களும் உயிர் தப்பினர். இந்த சம்பவங்கள் மூலமாக, கார்களின் வலிமையான கட்டமைப்புக்கு டாடா மோட்டார்ஸ் முக்கியத்துவம் கொடுப்பதாகவே கருதப்படுகிறது. தற்போது விபத்தில் சிக்கிய மாடல் டாடா ஹெக்ஸா காரின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட டாப் வேரியண்ட் மாடல்.

விபத்தில் சிக்கிய டாடா ஹெக்ஸா கார் கோவையிலுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான டாஃபே நிறுவனத்துக்கு சொந்தமானதாக தெரிவிக்கப்படுகிறது.

Via- Autoblogindia

புதிய டெஸ்லா மாடல் 3 காரின் படங்கள்!

விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய டெஸ்லா மாடல் 3 காரின் படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியை க்ளிக் செய்து காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Pictures have emerged on social media about the Tata Hexa car being involved in an accident in Coimbatore.
Please Wait while comments are loading...

Latest Photos