டாடா ஹெக்ஸா விலை விபரம் கசிந்தது...!!

Written By:

பெரும் ஆவலை வாடிக்கையாளர்களிடத்தில் தூண்டி உள்ளது டாடா ஹெக்ஸா கார். அதிக இடவசதி, ஆஃப்ரோடு தகவலமைப்புகள், சிறந்த எஞ்சின் போன்றவை இந்த காரின் மீதான எதிர்பார்ப்புக்கான காரணங்கள். இந்த நிலையில், டாடா ஹெக்ஸா காரின் விலை இணையதளம் மூலமாக கசிந்துள்ளது.

டாடா ஹெக்ஸா காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கான இணையதள விண்ணப்ப பக்கத்தில் டாடா மோட்டார்ஸ் விலை தவறுதலாக வெளியாகி உள்ளதாக தெரிகிறது.

டாடா ஹெக்ஸா கார் ரூ.12.30 லட்சம் விலையிலிருந்து ஆரம்பம் என்று வெளியான அந்த தகவல் பக்கத்தை டீம் பிஎச்பி இணையதளத்தை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதேநேரம், அந்த விலை விபரம் உடனடியாக அந்த பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.

பட உதவி: டீம் பிஎச்பி

மிக சவாலான விலையில் வரும் என்று வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பொய்க்காத அளவிலேயே டாடா ஹெக்ஸா காரின் விலை நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. எனினும், வரும் 18ந் தேதிதான் டாடா மோட்டார்ஸ் விலை அறிவிப்பை முறைப்படி வெளியிடும்.

இந்த கார் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் வருகை தர இருக்கிறது. டாடா சஃபாரி ஸ்டார்ம் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த எஞ்சின் இரண்டு விதமான ஆற்றலை வெளிப்படுத்தும் மாடல்களில் வருகிறது.

148 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் அளிக்கும் மாடல் வேரிகோர் 300 என்ற பெயரிலும், 154 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையிலும் வருகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் வருகிறது.

இடவசதி, வசதிகள், சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி சி ரோட்ஸ்டெர் படங்கள்!

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி சி ரோட்ஸ்டெர் ஸ்போர்ட் காரின் படங்களை இந்த ஆல்பத்தில் கண்டு மகிழலாம்.

English summary
Tata Hexa is due to launch in the Indian market on January 18, 2017. But ahead of that the price of the Hexa has been leaked through its official website.
Please Wait while comments are loading...

Latest Photos