வாவ்... மூன்று கஸ்டமைஸ் பாடி கிட்டுகளில் வரும் புதிய டாடா ஹெக்ஸா!!

Written By:

வாடிக்கையாளர்களின் ஆவலைத் தூண்டியிருக்கும் புதிய டாடா ஹெக்ஸா கார் வரும் 18ந் தேதி விற்பனைக்கு வர இருக்கிறது. டிசைன், வசதிகள், இடவசதி, விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த புதிய காருக்கு மூன்றுவிதமான கஸ்டமைஸ் பாடி கிட்டுகளை கூடுதலாக தேர்வு செய்வதற்கான வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த பாடி கிட்டுகள் மூலமாக டாடா ஹெக்ஸா காரின் தோற்றமும், வசதியும் வேற லெவலுக்கு செல்லும் என நம்பலாம்.

டஃப் கிட், எக்ஸ்படிஷன் கிட் மற்றும் லக்ஸ் கிட் என மூன்று விதமான பெயர்களில் வெவ்வேறு சிறப்புகளுடன் இந்த பாடி கிட்டுகள் டாடா ஹெக்ஸா காருக்கு வழங்கப்பட உள்ளன. வாடிக்கையாளர்களின் பயன்பாடு, விருப்பத்திற்கு ஏற்ப இந்த பாடி கிட்டுகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஹெக்ஸா டஃப் கிட்டில் பாடி கிளாடிங் எனப்படும் பிளாஸ்டிக் சட்டம், கூரையில் பொருத்துவதற்கான பெட்டி, வயர்லெஸ் சார்ஜர், டயர் பிரஷர் மானிட்டர், ஹெட் அப் டிஸ்ப்ளே மற்றும் மிதியடிகள் உள்ளிட்டவை இந்த கிட்டில் வழங்கப்படும். இந்த டஃப் கிட்டிற்கு ரூ.1.3 லட்சம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது எக்ஸ்படிஷன் கிட்டில் சாகசப் பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும். கூரையுடன் இணைக்கப்பட்ட கூடாரம், லைட் பார், படூல் விளக்குகள், தண்ணீர் புகா வசதியுடன் கூடிய லக்கேஜ் பேக், மண்வெட்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

மூன்றாவதான லக்ஸ் கிட்டில், அலங்காரத்தை கூட்டிக் கொள்வதறாகன ஆக்சஸெரீகள் இடம்பெற்று இருக்கும். வயர்லெஸ் சார்ஜர், விளக்கு பின்னணியில் ஒளிரும் டாடா லோகோ, க்ரோம் கைப்பிடிகள், கூலர் பாக்ஸ் ஆகியவை வழங்கப்படும்.

இந்த பாடி கிட்டில் உள்ள ஆக்சஸெரீகளில் விருப்பமானவற்றை மட்டும் தனியாக தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பையும் வாடிக்கையாலர்களுக்கு உண்டு. இந்த பாடி கிட்டுகளில் உள்ள ஆக்சஸெரீகளில் உள்ளதை தவிர்த்து, டயர் ரிப்பேர் கிட், மிதிவண்டி பொருத்துவதற்கான கேரியர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்பீக்கர்கள், சப் ஊஃபர், ஆம்பிளிஃபயர்களையும் வாங்க முடியும்.

டாடா ஹெக்ஸா காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், டிஃபியூசர், இரட்டை சைலென்சர் குழாய்கள், பிரிமியம் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. 5 அங்குல டச்ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10 ஜேபிஎல் ஸ்பீக்கர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் உள்ளிட்டவையும் இடம்பெற்று இருக்கும்.

6 சீட்டர் அல்லது 7 சீட்டர் மாடல்களில் வரும் டாடா ஹெக்ஸா காரில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ ஹெட்லைட்டுகள் உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்று இருக்கிறது. இந்த காரில் 156 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.2 லிட்டர் வேரிகோர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் வருகிறது.

ஜனவரி 18ந் தேதி விற்பனைக்கு வர இருக்கும் புதிய டாடா ஹெக்ஸா காருக்கு டாடா டீலர்களில் முன்பதிவு நடந்து வருகிறது. ரூ.11,000 முன்பணத்தை செலுத்தி முன்பணம் செய்து கொள்ளலாம்.

டாடா ஹெக்ஸா காரின் கேலரி!

டாடா ஹெக்ஸா காரை ஹைதராபாத்தில் டிரைவ்ஸ்பார்க் குழுவினர் டெஸ்ட் டிரைவ் செய்த போது எடுத்த படங்களை கேலரியில் பார்க்கலாம்.

English summary
The Tata Hexa will be offered with three customisable body kits to choose from, namely, Tuff Kit, Expedition Kit, and Luxe Kit.
Please Wait while comments are loading...

Latest Photos