புதிய டாடா கைட்-5 செடான் கார் ஏப்ரலில் விற்பனைக்கு அறிமுகம்?

Written By:

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட செடான் காருக்கு பிள்ளையார் சுழி போட்ட நிறுவனம் டாடா மோட்டார்ஸ். இண்டிகோ கார் மூலமாக இந்த ரகத்தை அறிமுகம் செய்த பெருமை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இருந்தாலும், அதிகம் பயனடைந்தது மாருதி கார் நிறுவனம்தான். டிசையர் மூலமாக இந்த செக்மென்ட்டில் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பை பெற்றுள்ளது.

இந்த செக்மென்ட்டில் பல புதிய மாடல்கள் களமிறங்கி மிச்சமுள்ள வர்த்த வாய்ப்பை பங்கு போட்டு வருகின்றன. இந்த நிலையில், தான் அறிமுகம் செய்த காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் சரியான வர்த்தகத்தை பெறும் முனைப்புடன் புதிய காம்பேக்ட் செடான் கார் மாடலை டாடா மோட்டார்ஸ் தயாரித்துள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருக்கும் டாடா டியாகோ காரின் அடிப்படையிலான செடான் கார் மாடலாக இந்த கார் வருகிறது. அதாவது, பூட்ரூம் சேர்க்கப்பட்ட காம்பேக்ட் செடான் கார் மாடலாக வருகை தர இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

டாடா டியாகோ காரின் அடிப்படையிலான செடான் கார் மாடலாக இருந்தாலும், இதன் பின்புற வடிவமைப்பு மிகச் சிறப்பானதாக இருக்கிறது. மேலும், இந்த காரில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பல நவீன தொழில்நுட்ப அம்சங்களும் இடம்பெற்றிருக்கும். அத்துடன் இந்த மார்க்கெட்டில் உள்ள போட்டியாளர்களைவிட மிக குறைவான விலையிலும் களமிறக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது கைட்-5 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த காரை வியாகோ அல்லது அல்டிகோ என்ற புதிய பெயர் ஒன்றில் அறிமுகம் செய்யும் திட்டமும் டாடா வசம் உள்ளது. இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட உள்ளது. மிகவும் சிறப்பான முக லட்சணம் கொண்ட கார் மாடலாகவும் இருக்கும்.

டாடா கைட்-5 காரில் பின்புற கூரையுடன் இயைந்து நிற்கும் ஸ்பாய்லரும், அதில் எல்இடி ஸ்டாப் லைட்டும் இணைக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. இந்த செக்மென்ட்டிலேயே அதிக இடவசதி கொண்ட பூட்ரூம் கொண்டதாகவும் இருக்கும்.

டாடா டியாகோ காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஈக்கோ மற்றும் சிட்டி என்ற இருவிதமான டிரைவிங் மோடுகளில் எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

புதிய டாடா கைட்-5 செடான் காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் போன்ற பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கும். அதேபோன்று, 5 இன்ச் டச்ஸ்கிரீனுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் போன்றவையும் இந்த காரை பிரிமியம் அந்தஸ்துக்கு உயர்த்தும்.

இதுபோன்று, எல்லா விதத்திலும் போட்டியாளர்களை விஞ்சிய அம்சங்களை டாடா கைட்-5 செடான் கார் கொண்டதாக வருகிறது. அத்துடன், விலையையும் முடிந்தவரை மிக குறைவாக நிர்ணயிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. எனவே, டாடா டியாகோ கார் போன்றே, டாடா கைட்-5 செடான் காருக்கும் பெரிய அளவிலான வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் எஸ் காரின் படங்கள்!

புதிய அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் எஸ் காரின் படங்களை கண்குளிர கண்டு மகிழுங்கள்.

English summary
According to the emerging reports, Tata Motors is all set to launch the compact sedan, the Kite 5 in the Indian market by April 2017.
Please Wait while comments are loading...

Latest Photos