வெறும் 70 ரூபாய் செலவில் 200 கிமீ தூரம் பயணிக்கும் வாயுவில் இயங்கும் டாடா கார்!

அழுத்தப்பட்ட வாயுவில் இயங்கும் புதிய கார் மாடலை டாடா மோட்டார்ஸ் தீவிரமாக தயாரித்து வருகிறது. இந்த கார் எப்போது சந்தைக்கு வரும் என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

By Saravana Rajan

சுற்றுச்சூழலுக்கு தீங்கு தராத மாற்று எரிபொருளில் இயங்கும் கார்களை உருவாக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆனால், அவை நடைமுறை பயன்பாட்டுக்கும், அதிக மைலேஜ், ரேன்ச் மற்றும் குறைவான முதலீடு கொண்டதாக இருக்க வேண்டும் என்ற பல சவால்கள் முன்னால் நிற்கின்றன.

வாயுவில் இயங்கும் டாடா கார் எப்போது அறிமுகமாகிறது... பரபரப்பு தகவல்கள்!!

மாற்று எரிபொருள் கார் என்றாலே பேட்டரியில் இயங்கும் மின்சார கார்கள்தான் சிறப்பான சாய்ஸாக இருக்கிறது. ஆனால், அதையும் தாண்டி வாயுவில் இயங்கும் கார் மாடலை உருவாக்கும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது.

வாயுவில் இயங்கும் டாடா கார் எப்போது அறிமுகமாகிறது... பரபரப்பு தகவல்கள்!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மோட்டார் டெவலப்மென்ட் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் கூட்டணியில் இந்த காரை உருவாக்கி வருகிறது டாடா மோட்டார்ஸ். ஏர்பாட் என்று குறிப்பிடப்படும் இந்த காரை வர்த்தக ரீதியில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் தீவிரம் காட்டி வருகிறது.

வாயுவில் இயங்கும் டாடா கார் எப்போது அறிமுகமாகிறது... பரபரப்பு தகவல்கள்!!

சில ஆண்டுகளுக்கு முன் இந்த காரின் முதல்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டதாக தகவல் வெளியிடப்பட்டதுடன், இந்த காரை மேம்படுத்தும் இரண்டாவது கட்ட பணிகளும் துவங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

வாயுவில் இயங்கும் டாடா கார் எப்போது அறிமுகமாகிறது... பரபரப்பு தகவல்கள்!!

இந்த நிலையில், டாடா ஏர்பாட் கார் குறித்த புதிய தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன. அழுத்தப்பட்ட வாயுவை எரிபொருளாக கொண்டு இயங்கும் இந்த கார் இன்னும் மூன்று ஆண்டுகளில் சந்தைக்கு கொண்டு வரப்பட உள்ளது என்பதே புதிய தகவல்.

வாயுவில் இயங்கும் டாடா கார் எப்போது அறிமுகமாகிறது... பரபரப்பு தகவல்கள்!!

அடுத்த சில ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்று தேடும்போது இந்த கார் மிகச் சரியான தேர்வாக அமையும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், இந்த கார் வெறும 70 ரூபாய் எரிபொருள் செலவில் 200 கிமீ தூரம் வரை செல்லும். அதுவும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்காமல் செல்லும்.

வாயுவில் இயங்கும் டாடா கார் எப்போது அறிமுகமாகிறது... பரபரப்பு தகவல்கள்!!

இந்த கார் இலகு எடையும், அதிக உறுதித்தன்மையும் வாய்ந்த அலுமினிய பாகங்களை கொண்ட கட்டமைப்பில் உருவாக்கப்படுகிறது. 907 கிலோ மட்டுமே எடை கொண்டதாக இருக்கும். எனவே, அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும்.

வாயுவில் இயங்கும் டாடா கார் எப்போது அறிமுகமாகிறது... பரபரப்பு தகவல்கள்!!

இந்த காரில் 4 பேர் செல்வதற்கான இருக்கை வசதி இருக்கும். அதிகபட்சமாக மணிக்கு 65 கிமீ வேகத்தில் செல்லும். எனவே, முழுக்க முழுக்க இது நகர்ப்புற பயன்பாட்டுக்கான மாடலாக இருக்கும்.

புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிட்டி காரின் பிரத்யேக படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
English summary
Tata Motors’ new car that is powered by compressed air technology could be launched in the country in three years of time.
Story first published: Saturday, February 18, 2017, 12:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X