ஏ.எம்.டி கியர்பாக்ஸ் கொண்ட டாடா பேருந்துகள் விற்பனைக்கு வந்தது...!

Written By:

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 9 முதல் 12 மீட்டர் நீளம் கொண்ட பிரிவில் புதிய மாடல் பேருந்துகளை அறிமுகப்பட்டுத்தியுள்ளது. டாடா ஸ்டார்பஸ் மற்றும் டாடா அல்ட்ரா என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த பேருந்துகள் ஆட்டோமேட்டேட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டாடா நிறுவனத்தின் ஸ்டார்பாஸ் மற்றும் அல்ட்ரா பிராண்டுகளில் அறிமுகமாகியுள்ள இந்த பேருந்துகளில் மாடலுக்கு ஏற்றவாறு 23 முதல் 54 இருக்கை வசதிகள் உள்ளன. வேப்கோ நிறுவனத்தில் ஏ.எம்.டி கியர்பாக்ஸ் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

நகர்புறங்களில் ஏற்படும் டிராஃபிக் மற்றும் வாகன நெரிசலுக்கு ஏற்றவாறு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா ஸ்டார்பஸ் மற்றும் டாடா அல்ட்ரா மாடல் பேருந்துகளை வடிவமைத்துள்ளது.

சாலைகளில் எளிதாக கையாளக்கூடிய திறனுடன், கூடுதலாக 3 சதவீத எரிபொருள் சிக்கனத்தை சேமிக்கக்கூடியதாக் இந்த பேருந்துகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த மாடல் பேருந்துகள் மேம்படுத்தப்பட்ட ஒன்றாகவே உள்ளது. ஆட்டோமேடட் மேனுவல் கியர்பாஸ் வசதியுடன், எரிபொருள் மற்றும் ஆற்றலை அதிக வெளிப்படுத்த 'பவர்' என்ற மோடும், மேலும் அவற்றை சேமிக்க 'எக்னாமி' என்ற இருவிதமான மோடுகள் இதில் உள்ளன.

மேலும் இதில் இடம்பெற்றுள்ள கியர் டிடெக்சன் என்ற தொழில்நுட்பம் மூலம் டார்க் திறனை தேவைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம். இதனால் சரிவான சாலைகளில் அதிக எடையுடன் போகும்போது ஓட்டுநர்கள் சிரமமின்றி பேருந்தை இயக்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள டாடா ஸ்டார்பஸ் மற்றும் டாடா அல்ட்ரா பேருந்துகளை சுற்றுலா, அலுவலக, பள்ளி வாகனம் போன்ற எந்ததேவைகளுக்காகவும் பயன்படுத்தலாம். இந்தியாவில் டாடா ஏஎம்டி பேருந்துகளுக்கு ரூ.21 லட்சம் ஆரம்ப விலையாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நிர்ணயத்துள்ளது.

English summary
Tata Motors Launched AMT Buses with BSIV Engine. AMT buses will range from 9-12 meters and a seating capacity of 23 to 44 passengers.
Please Wait while comments are loading...

Latest Photos