புதிய டாடா நெக்ஸான் வருகை குறித்த தகவல் வெளியானது!

Written By:

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நெக்ஸான் என்ற எஸ்யூவி காரின் கான்செப்ட் மாடலை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தி இருந்தது. அப்போதே, அதன் டிசைன் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அதன்பிறகு இந்த கார் தீவிரமாக சாலை சோதனை ஓட்டத்தில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது ஜெனிவா நகரில் நடந்து வரும் வாகன கண்காட்சியில், டாடா நெக்ஸான் கார் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இப்போது இந்த கார் பற்றிய கூடுதல் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வரும் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் டாடா நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தீபாவளி ரிலீசாக புதிய டாடா நெக்ஸான் வருகை தர இருப்பது வாடிக்கையாளர் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமல்ல, டாடா நெக்ஸான் காரில் புத்தம் புதிய 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் எஞ்சின் மாடலிலும் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய டீசல் எஞ்சினுடன் வரும் முதல் டாடா கார் நெக்ஸான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் மாடலில் புதிய 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். மிகச்சிறப்பான திறனை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த எஞ்சின் வருகை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

காம்பேக்ட் எஸ்யூவி கார் மார்க்கெட்டில் சற்று தாமதமாக களமிறங்கினாலும் கூட, மிகச் சிறப்பான டிசைன் தாத்பரியங்களை டாடா நெக்ஸான் எஸ்யூவி பெற்றிருக்கிறது. மிக வித்தியாசமாகவும், தனித்துவத்துடனும் இருப்பதும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என நம்பலாம்.

புதிய டாடா நெக்ஸான் காரின் அதிகபட்ச வசதிகள் கொண்ட டாப் வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 17 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் போன்றவை இடம்பெற்றிருக்கும். இரட்டை வண்ணக் கலவையில் வருகிறது.

உட்புறத்தில் மிகவும் பிரிமியம் கார் போல இருக்கும் என தெரிகிறது. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, பின்புற பயணிகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம், வாய்ஸ் கமான்ட் வசதி போன்றவை இந்த காரில் இடம்பெற்றிருக்கும்.

பாதுகாப்பு வசதிகளிலும் குறைவிருக்காது. புதிய டாடா நெக்ஸான் காரில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வளைவுகளில் அதிக நிலைத்தன்மையுடன் காரை செலுத்தும் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஐசோஃபிக்ஸ் சீட் மவுண்ட்டுகல், ரியர் வியூ கேமரா போன்ற பல பாதுகாப்பு வசதிகள் இருக்கும்.

டாடா நெக்ஸான் கார் 4 மீட்டரு்ககும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எனவே, வரிச்சலுகை மூலமாக மிக சவாலான விலையில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. பேஸ் மாடல் ரூ.6.5 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். டாடா டியாகோ, டாடா டிகோர் கார்களை தொடர்ந்து புதிய டாடா நெக்ஸான் காரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும், புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Read in Tamil: Tata Motors confirmed a 1.5-litre Revotorq diesel mill for Nexon and would launch in India in October; however, the petrol variant is expected to be a 1.2-litre turbocharged unit.
Please Wait while comments are loading...

Latest Photos