டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்- டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்!

Written By:

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஸ்பை படங்களை எமது டிரைவ்ஸ்பார்க் வாசகர் சவுரவ் வினோத் அனுப்பி வைத்துள்ளார். அந்த படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கான வரவேற்பு தெரிந்ததே. முன்னணி கார் நிறுவனங்களின் விற்பனையில் இந்த காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக மாறி இருக்கிறது.

அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை தயாரித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்த எஸ்யூவியின் கான்செப்ட் மாடல் தற்போது தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்ட தீவிர சாலை சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிற காம்பேக்ட் எஸ்யூவி கார்களிலிருந்து மிக ஸ்டைலான தோற்றத்துடன் எதிர்பார்க்கப்படும் டாடா நெக்ஸான் எஸ்யூவி பெங்சோகளூரில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களை எமது வாசகர் சவுரவ் வினோத் டிரைவ்ஸ்பார்க் தளத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

காரின் தோற்றத்தையும், வடிவமைப்பு அம்சங்களையும் முழுமையாக தெரிந்து கொள்ள முடியாதவாறு, அடையாளங்கள் மறைக்கப்பட்டு சோதனை ஓட்டங்கள் தொடர்கிறது. அதேநேரத்தில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கான்செப்ட் மாடலின் டிசைன் தாத்பரியங்களில்தான் இந்த கார் முழுமை பெற்றிருப்பதை காண முடிகிறது.

டாடா நெக்ஸான் எஸ்யூவி 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் எதிர்பார்க்கப்படுகிறது. இதில், டீசல் எஞ்சின் முற்றிலும் புதிது. மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் இன்றி, ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வருகிறது.

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் வடிவமைப்பு இதர போட்டி மாடல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும். இரட்டை வண்ணக் கலவை, ஸ்டைலான பின்புற கூரை அமைப்பு, அதிக இடவசதி கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக வருகை தர இருக்கிறது.

இந்த புதிய எஸ்யூவி 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட ரகத்தில் வருகிறது. 3.99 மீட்டர் நீளமும், 1.73 மீட்டர் அகலமும், 1.6 மீட்டர் உயரமும் கொண்டதாக வருகிறது. இந்த காரின் வீல் பேஸ் 2.54 மீட்டராக இருக்கும். 5 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதியுடன் வருகிறது.

இறுதிக் கட்ட சாலை சோதனை ஓட்டத்தில் இருக்கும் இந்த புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி தீபாவளி பண்டிகை சமயத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது இப்போதைய கூற்றாக இருக்கிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, January 5, 2017, 14:57 [IST]
English summary
The Tata Nexon SUV has been spied testing once again. The Nexon is expected to launch later this year.
Please Wait while comments are loading...

Latest Photos