1040 பி.எச்.பி பவர் கொண்ட டிரக்குகளை அறிமுகம் செய்த டாடா

டிரக்குகளுக்காக நடைபெற்ற பந்தயப்போட்டியில் டாடா நிறுவனம் 1000 பிஎச்பி திறன் கொண்ட தனது புதிய டிரக்குகளை அறிமுகப்படுத்தியது.

By Azhagar

நொய்டாவில் டாடா நிறுவனத்தின் T1 பிரைமா டிரக்குகளுக்கான பந்தயப் போட்டி நடைபெற்றது. நான்காவது ஆண்டாக நடைபெற்ற இந்த போட்டியில் 1000 பி.எச்.பி பவர் கொண்ட டாடா பிரைமா டிரக்குகள் பந்தய சாலையில்
சீறிப் பாய்ந்தன.

புதிய ஆற்றல்கொண்ட டாடாவின் பிரைமா டிரக்குகள்

அதிக கணரக வாகனங்களை புதிய ஆற்றல் கொண்டு உருவாக்கவேண்டும் என்ற நோக்கில், இந்த புதிய பிரைமா டிரக்குகளை தயாரிக்க அமெரிக்காவின் குமின்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து டாடா இந்த மாடலை உருவாக்கியுள்ளது.

புதிய ஆற்றல்கொண்ட டாடாவின் பிரைமா டிரக்குகள்

எஞ்சின் மற்றும் மின்னாற்றல் உற்பத்தி பாகங்களை உருவாக்கும் அமெரிக்காவின் குமின்ஸ் நிறுவனம், இதுவரை இல்லாத தொழில்நுட்பத்தை கொண்டு டாடா பிரைமா டிரக்குகளுக்கான எஞ்சினின் செயல்திறன்களை கூட்டியுள்ளது.

புதிய ஆற்றல்கொண்ட டாடாவின் பிரைமா டிரக்குகள்

டாடா தயாரித்திருக்கும் இந்த புதிய டிரக்குகள் 10 நொடிகளில் 0-160 கிலோ மீட்டர் வேகத்தை அடையும் ஆற்றலும், 3500 என்.எம் திறனும் பெற்றவையாகும். 12 லிட்டர் குமின்ஸ் எஞ்சினில் இந்த புதிய டிரக்குகள் இயங்கும். மேலும் வண்டியின் எல்லா பகுதியிலும் சமமான கணம், மேம்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம் மற்றும் காற்றோட்டம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஆற்றல்கொண்ட டாடாவின் பிரைமா டிரக்குகள்

எஞ்சினின் பவரை அனைத்து சக்கரங்களுக்கும் கடத்த ZF 16 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்பு உள்ளது. இதன் மூலம் அதிக செயல்திறன் கொண்ட டாடாவின் முதல் டிரக் என்ற பெருமையையும் டி1 பிரைமா பெற்றுள்ளது.

புதிய ஆற்றல்கொண்ட டாடாவின் பிரைமா டிரக்குகள்

டிரக்குகளில் வேகமும், செயல்திறனும் அதிகரிக்கும்போது, எஞ்சின் கால நிலை மற்றும் அழுத்தம் ஆகியவற்றை அறிந்து செயல்படும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. டி1 பிரைமா டிரக்கில் தயாரிப்பில் இது ஒரு கவனித்தக்க செயல்பாடாக உள்ளது.

புதிய ஆற்றல்கொண்ட டாடாவின் பிரைமா டிரக்குகள்

சிறந்த டிரக்கை அடையாளம் காண்பதற்காக நடைபெற்ற இந்த போட்டியில் பங்கேற்க உலகளவிலிருந்து 3300 போட்டியாளர்கள் விண்ணப்பத்திருந்தனர். அவர்களில் 20 பேர் மட்டுமே இந்த போட்டியில் களமிறங்கினர்.

புதிய ஆற்றல்கொண்ட டாடாவின் பிரைமா டிரக்குகள்

6 குழுக்களாக பிரிந்து இதில் போட்டியாளர்கள் பங்கேற்றனர். 12 வெளிநாட்டை சேர்ந்த டிரக் ரேஸர்களுடன், 6 இந்தியப் போட்டியாளர்களும் கலந்துகொண்டனர்.

பரபரப்பாக நடந்து முடிந்துள்ள T1 பிரைமா டிரக் பந்தயப் போட்டியில் போட்டியாளர்கள் இருபது பேரில் 10 பேர் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர். இறுதி போட்டிக்கான தேதியை டாடா நிறுவனம் விரைவில் அறிவிக்கவுள்ளது.

டாடாவின் புதிய அறிமுகமான டிகோர் காரின் புகைப்படங்கள்

Most Read Articles
English summary
The engine of the all-new 1000 bhp T1 race truck is being developed in collaboration with Cummins Inc. of the U.S.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X