முதல்முறையாக கேமராவில் சிக்கிய டாடாவின் புதிய பிரிமியம் எஸ்யூவி!

Written By:

சொகுசு எஸ்யூவி தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற இங்கிலாந்த சேர்ந்த லேண்ட்ரோவர் நிறுவனம் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதனால், லேண்ட்ரோவர் நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை டாடா மோட்டார்ஸ் தனது கார்களில் பயன்படுத்த துவங்கி உள்ளது.

இந்த நிலையில், லேண்ட்ரோவர் எஸ்யூவியின் அடிப்படையில் புதிய எஸ்யூவி மாடலை தயாரிக்க இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்தது. இது எஸ்யூவி ஆர்வலர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தியது. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய பிரிமியம் எஸ்யூவி மாடல் முதல்முறையாக கேமரா கண்களில் சிக்கி உள்ளது.

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் புகழ்பெற்ற எஸ்யூவி மாடலான டிஸ்கவரி எஸ்யூவியின் அடிப்படையில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த புதிய எஸ்யூவியின் சாலை சோதனை ஓட்டங்கள் ரகசியமாக நடந்து வருகிறது.

டாடா க்யூ501 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய பிரிமியம் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. மேலும், லேண்ட்ரோவர் பேட்ஜிலேயே இந்த எஸ்யூவி சோதனை ஓட்டம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

மிகச் சிறப்பான டிசைனுடன் காட்சியளிக்கும் இந்த எஸ்யூவி அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. லேண்ட்ரோவர் நிறுவனத்தின் சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் டாடா பிராண்டில் இந்த புதிய எஸ்யூவி மாடல் வர இருக்கிறது.

மேலும், இந்த எஸ்யூவியில் பொருத்துவதற்கான டீசல் எஞ்சினை ஃபியட் க்றைஸ்லர் நிறுவனத்திடமிருந்து பெறுவதற்கான முயற்சிகளும், பேச்சுவார்த்தைகளும் நட ந்து வருகின்றன.

இந்த புதிய எஸ்யூவி மாடல் ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் நேரடியாக போட்டி போடும்.

Source: Thrustzone

புதிய ஃபோர்டு ஜிடி சூப்பர் காரின் படங்கள்!

புதிய ஃபோர்டு ஜிடி சூப்பர் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் கண்டு ரசிக்கலாம்.

Story first published: Monday, January 30, 2017, 17:35 [IST]
English summary
Tata Q501 Premium SUV Spied For The First Time.
Please Wait while comments are loading...

Latest Photos