டாடா டீகோர் காரின் ஏஎம்டி மாடல் விரைவில் வருகை!

Written By:

டாடா டியாகோ காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட டாடா டீகோர் செடான் கார் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த மாதம் 3,022 டீகோர் கார்கள் விற்பனையாகி அசத்தி இருக்கிறது.

இதனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உற்சாகம் அடைந்துள்ளது. இந்த நிலையில், டாடா டீகோ காருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை தக்க வைக்கும் விதத்தில், ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதி கொண்ட மாடலையும் விரைவில் அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக, இந்தியன் ஆட்டோஸ் பிளாக் தளத்திடம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவர் விவேக் ஸ்ரீவத்சா தகவல் தெரிவித்துள்ளார். அதில், கூடிய விரைவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

டாடா டியோகா காரின் ஏஎம்டி மாடல் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது அதற்கு நல்ல வரவேற்பு இருப்பதையடுத்து, டீகோர் காரிலும் ஏஎம்டி மாடலை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருக்கிறது.

மேலும், டாடா டியாகோ காரில் பெட்ரோல் மாடலில் மட்டுமே ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் கிடைக்கிறது. அதேபோன்று, டீகோர் பெட்ரோல் மாடலில் மட்டுமே ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. மேலும், டீகோர் ஏஎம்டி மாடலில் எஞ்சின் இயக்க நிலையை மாற்றும் ஸ்போர்ட் மோடு என்ற தொழில்நுட்ப வசதியும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா டீகோ கார் மிக வித்தியாசமான பாடி ஸ்டைலில் வந்திருப்பது வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. தவிரவும், கவர்ச்சியான இன்டீரியர் அமைப்பு, வசதிகள் இந்த காரின் மதிப்பை உயர்த்துகின்றன.

டாடா டீகோர் காரில் 83 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலில் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படும். டாடா டீகோர் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் நிச்சயம் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #டாடா #tata
English summary
Tata Motors has stated that the Tigor AMT will be launched in the near future in the Indian market. Read more to get all the details about the AMT variant of the compact sedan.
Please Wait while comments are loading...

Latest Photos