புதிய டாடா டீகோர் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய டாடா டீகோர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய டாடா டீகோர் காரின் விலை, சிறப்பம்சங்கள், வசதிகள், தொழில்நுட்ப விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய டாடா டீகோர் காம்பேக்ட் செடான் கார் மும்பையில் நடந்த விழாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்டைல்பேக் என்ற புதிய ரகத்தில் டாடா மோட்டார்ஸ் குறிப்பிடும் இந்த கார் மிக சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

 வேரியண்ட்டுகள் விபரம்

வேரியண்ட்டுகள் விபரம்

வசதிகளை பொறுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் தலா 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. எக்ஸ்இ, எக்ஸ்டி,எக்ஸ்இசட், எக்ஸ்இசட்[ஆப்ஷனல்] ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

டிசைன்

டிசைன்

இந்த காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் ஏராளமான மாடல்கள் குவிந்துவிட்டன. எனவே, போட்டியாளர்களை எதிர்கொள்வதற்காக மிகவும் தனித்துவமான டிசைனில் இந்த காரை டாடா வடிவமைத்து இறக்கி இருக்கிறது. கூபே ரக கூரை அமைப்பு 'நாட்ச்பேக்' ரக கார் போன்ற தோற்றத்தை தருகிறது. புரொஜெக்டர் ஹெட்லைட் குறிப்பிடும்படியான விஷயம்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய டாடா டீகோர் காரில் 83 பிஎச்பி பவரை அளிக்க 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 69 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இரண்டிலுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

டாடா டீகோர் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 26 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது நிச்சயமாக வாடிக்கையாளர்களை கவரும் அம்சமாக இருக்கும்.

இன்டீரியர்

இன்டீரியர்

இரட்டை வண்ண டேஷ்போர்டு, தரமான பாகங்களுடன் கவர்கிறது. புதிய டாடா டீகோர் காரில் 5 இன்ச் திரையுடன் ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் இருக்கிறது. டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியும் இருக்கிறது.

ஆடியோ சிஸ்டம்

ஆடியோ சிஸ்டம்

இந்த காரில் 4 ஸ்பீக்கர்கள் மற்றும் 4 ட்வீட்டர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம் இருக்கிறது. இந்த ஆடியோ சிஸ்டம், சர்ரவுண்ட் சவுண்ட் தொழில்நுட்பத்தில் இசையை வழங்கும். சொகுசு கார்களில் மட்டுமே இந்த சர்ரவுண்ட் சவுன்ட் சிஸ்டத்தை காண முடிந்த நிலையை டாடா மோட்டார்ஸ் மாற்றி உள்ளது.

பூட்ரூம்

பூட்ரூம்

புதிய டாடா டீகோர் காரில் 419 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இருக்கிறது. இது நீண்ட தூர பயணங்களுக்கு மிகச் சிறப்பானதாக இருக்கும் என்பதுடன், காம்பேக்ட் செடான் கார் ரகத்தில் மிக சிறந்த பூட்ரூம் இடவசதியுடன் வந்துள்ளது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

டாடா டீகோர் கார் எஸ்பிரெஸ்ஸோ பிரவுன், பியர்ல்எஸென்ட் ஒயிட், பெர்ரி ரெட், பிளாட்டினம் சில்வர், ஸ்ட்ரைக்கர் புளூ, காப்பர் டேஸில் ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கும்.

விலை

விலை

புதிய டாடா டீகோர் கார் ரூ.4.70 லட்சம் முதல் ரூ.7.09 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #tata motors
English summary
Read in Tamil: Tata Tigor compact sedan launched in India at INR 4.70 lakhs (Ex-showroom) while the top end variant gets a price tag of INR 7.09 lakh (ex-showroom).
Story first published: Wednesday, March 29, 2017, 13:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X