பிக்கப்பில் புகாட்டியை ஓரங்கட்டும் வல்லமை கொண்ட புதிய எலக்ட்ரிக் சூப்பர் கார்!

Written By:

கடந்த ஆண்டு ஜனவரியில் டுபக் மோட்டார்ஸ் என்ற நிறுவனம் தோமஹாக் என்ற மின்சார சூப்பர் காரை பற்றிய விபரங்களை வெளியிட்டது. அந்த விபரங்கள் ஆட்டோமொபைல் துறையினரையும், கார் பிரியர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்த நிலையில், தோமஹாக் மின்சார சூப்பர் கார் அறிமுகம் மற்றும் இதர தகவல்களை டுபக் மோட்டார்ஸ் வெளியிட்டு இருக்கிறது.

பொதுவாக எலக்ட்ரிக் கார்களின் பிக்கப் மந்தமாக இருக்கும் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. ஆனால், அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கும் விதத்தில் வருகிறது தோமஹாக் எலக்ட்ரிக் சூப்பர் கார். அதாவது, புகாட்டி சூப்பர் கார்களையே விஞ்சும் பிக்கப் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆம், தோமஹாக் எலக்ட்ரிக் சூப்பர் காரை ஸ்போர்ட் மோடில் வைத்து ஓட்டும்போது 0- 100 கிமீ வேகத்தை வெறும் 2 நொடிகளுக்குள் எட்டிவிடுமாம். இது புகாட்டி மட்டுமல்ல, டெஸ்லாவுக்கும் சவால் விடுகிறது. டெஸ்லா மாடல்கள் 0 -100 கிமீ வேகத்தை 2.3 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது. ஆனால், அதற்கும் மேலான செயல்திறன் கொண்டதாக இருக்கும்.

தோமஹாக் மின்சார சூப்பர் காரில் இருக்கும் 100 KWH திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 595 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது புரட்சிகரமான ரேஞ்ச் கொண்ட காராகவும் இருக்கும்.

இந்த காரில் இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 800 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

புதிய தோமஹாக் மின்சார சூப்பர் கார் கார்பன் ஃபைபர் சேஸியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. எடை குறைவானதாகவும், அதிக உறுதி மிக்க கட்டமைப்புடன் வருவதும் மிகச் சிறந்த செயல்திறனை வழங்குவதற்கு காரணம்.

அதேநேரத்தில், வெளிப்புற தோற்றம் சற்று மேம்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது பலரது கருத்தாக இருக்கிறது. இந்தளவு செயல்திறன் கொண்ட காருக்கு தோற்றம் ஒரு பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது என்று மறுபுறத்தில் ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர்.

எது எப்படியோ, மின்சார கார்களின் தயாரிப்பில் இந்த புதிய தோமஹாக் சூப்பர் கார் புரட்சிகரமான மாடலாக இருக்கும் என்று நம்பலாம். அடுத்த ஆண்டு இந்த புதிய சூப்பர் காரின் உற்பத்தி துவங்க இருபப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

English summary
In January 2016 Dubuc Motors revealed a promotional video of its new electric car, the Tomahawk E-Supercar. On paper, the car boasted impressive specs.
Please Wait while comments are loading...

Latest Photos