போக்குவரத்து நெரிசலில் மிக மோசமான உலகின் டாப் - 10 நகரங்கள்!

போக்குவரத்து நெரிசலில் மிக மோசமான டாப் 10 நகரங்கள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

பெருநகரங்களின் தலையாய பிரச்னைகளில் ஒன்றாக போக்குவரத்து நெரிசல் மாறியிருக்கிறது. வாகனப் பெருக்கத்துக்கு தக்கவாறு, போதிய சாலை கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண இயலாத நிலைக்கு பல நகரங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன.

இந்தநிலையில், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நகரங்கள் குறித்து நேவிகேஷன் சாதனங்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் டாம் டாம் நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. உலகின் 48 நாடுகளில் உள்ள 390 நகரங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு புள்ளிவிபரங்களை சேகரித்து, அதில் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட உலகின் டாப்- 10 நகரங்கள் குறித்த விபரங்களை வெளியிட்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து காணலாம்.

 10. சான்டியாகோ, சிலி

10. சான்டியாகோ, சிலி

உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் 10வது இடத்தில் இருக்கிறது சிலி தலைநகர் சான்டியாகோ நகரம். அந்நாட்டின் பொருளாதார தலைநகராகவும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக இருப்பதால், மக்கள் பெருக்கமும், அதற்கு ஈடாக வாகனப் பெருக்கமும் அதிகரித்துள்ளது. இதனால், இப்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி வருகிறது.

09. ஸூஹாய், சீனா

09. ஸூஹாய், சீனா

இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஸுஹாய் நகரம் உள்ளது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த சீன நகரங்களில் ஒன்றான ஹூஹாய் நகருக்கு இப்போது போக்குவரத்து நெரிசல் முதல் எதிரியாக மாறி உள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் சமூகவியல் துறை வெளியிட்ட அறிக்கையில், சீனாவில் வாழ்வதற்கு சிறந்த இடமாக தெரிவிக்கப்பட்ட ஹூஹாய் இப்போது போக்குவரத்து நெரிசலால் அந்த பெருமையை இழக்கும் அபாயத்தில் உள்ளது.

 08. செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா

08. செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா

ரஷ்யாவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரமும் மிக மோசமான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. வெளிநாட்டு தூதரகங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், வங்கிககள் என வணிக நிறுவனங்கள் நிரம்பி வழியும் இந்த நகரத்திற்கு இப்போது போக்குவரத்து நெரிசல் என்பது மிகப்பெரிய தலைவலியாக மாறி உள்ளது.

 07. இஸ்தான்பபுல், துருக்கி

07. இஸ்தான்பபுல், துருக்கி

ஏழாம் இடத்தில் துருக்கி தலைநகர் இஸ்தான்புல் உள்்ளது. மக்கள் நெருக்கம் மிகுந்த இந்த நகரம் சுற்றுலாவுக்கும் பெயர் பெற்றது. இதனால், இங்கு எப்போதுமே போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத விஷயமாகி விட்டது. போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல்களை உடனுக்குடன் ஓட்டுனர்கள் தெரிந்து கொள்வதற்கான லைவ் மேப் வசதியையும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

06. சாங்கிங், சீனா

06. சாங்கிங், சீனா

தென்மேற்கு சீனாவில் உள்ள சாங்கிங் நகரமும் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி. அங்கு தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால், கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகம். இதனால், இந்த நகரத்தில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத விஷயமாகி விட்டது.

 05. மாஸ்கோ

05. மாஸ்கோ

பசுமை நகரம் என்ற பெருமைக்குரிய ரஷ்ய தலைநகர் மாஸ்கோ இப்போது போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்றுவிட்டது. இப்போது அங்கு போக்குவரத்து நெரிசல் என்பது மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க அம்மாநகர நிர்வாகம் பல்வேறு முயற்சிகளையும், நடவடிக்கைகளும் மேற்கொண்டு பிரயோஜனமில்லை.

04. ஜகார்த்தா, இந்தோனேஷியா

04. ஜகார்த்தா, இந்தோனேஷியா

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நகரமான ஜகார்த்தாவும் போக்குவரத்து நெரிசலில் முன்னிலை வகிக்கிறது. வாகனப் பெருக்கம் அதிகரித்து வருவதால், வரும் காலங்களில் இந்த நகரின் போக்குவரத்து நெரிசல் மிக மோசமான நிலையை அடையும் என்று எச்சரிக்கின்றனர்.

03. புக்காரெஸ்ட், ருமேனியா

03. புக்காரெஸ்ட், ருமேனியா

ருமேனியாவின் முக்கிய தொழில் நகரமாக விளங்கும் புக்காரெஸ்ட் மிக மோசமான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. மேலும், ருமேனியாவின் போக்குவரத்து கட்டமைப்பில் முக்கிய சந்திப்பாக இந்த பகுதி விளங்குவதும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணியாக இருக்கிறது. ருமேனியா மட்டுமன்றி பிற அண்டை நாடுகளும் இந்த நகரத்துடன் இணைப்பு பெற்றிருக்கிறது.

02. மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ

02. மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ

மக்கள் நெருக்கம் மிகுந்த இந்த நகரில் போக்குவரத்து நெரிசல் மிக மோசமாக இருக்கிறது. மக்கள் பெருக்கம், வாகனப் பெருக்கத்துக்கு தக்க போக்குவரத்து கட்டமைப்புகளை விரிவு படுத்ததாதே இந்த பிரச்னைக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

01. பேங்காக், தாய்லாந்து

01. பேங்காக், தாய்லாந்து

உலகின் மிகச் சிறந்த சுற்றுலா நகரங்களில் ஒன்றாக விளங்கும் பேங்காக் நகருக்கு இப்போது போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய எதிரியாக மாறி விட்டது. சுற்றுலாத் துறையை இந்த போக்குவரத்து நெரிசல் வெகுவாக பாதிக்க துவங்கி உள்ளது. 1980களில் இருந்து பேங்காக் நகரின் மக்கள் தொகை பெருக்கமும், வாகன பெருக்கமும் அதிகரிக்கத் துவங்கியது. இன்று அந்த நிலை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்றுவிட்டது.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
English summary
Here’s a list of top 10 cities with the worst traffic jam in the world in 2017, according to a survey by TomTom.
Story first published: Wednesday, February 22, 2017, 11:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X