2016-ல் விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார்கள்!

விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார்களின் பட்டியலை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

By Saravana Rajan

கடந்த ஆண்டு இந்தியாவில் வாகன விற்பனை 3.5 மில்லியன் என்ற புதிய உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக, உலகின் 5வது பெரிய கார் மார்க்கெட் என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்த நிலையில், ஸ்திரமான கார் வர்த்தகம் காரணமாக, இந்திய கார் மார்க்கெட் அபரிமிதமான வளர்ச்சியை பெற்று வருகிறது. சில தடங்கல்கள் ஏற்பட்டாலும், கடந்த ஆண்டு கார் விற்பனை சிறப்பாகவே அமைந்தது.

2016ம் ஆண்டில் விற்பனையில் டாப் 10 கார்கள்!

கடும் சந்தைப் போட்டிக்கு மத்தியிலும் கடந்த ஆண்டு கார் விற்பனையில் மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களின் தயாரிப்புகள்தான் ஆதிக்கம் செலுத்தின. டாப் -10 பட்டியலில் 6 இடங்களை மாருதி தயாரிப்புகளும், 3 இடங்களை ஹூண்டாய் தயாரிப்புகளும் கைப்பற்றின. ஒரே ஒரு இடத்தை மட்டும் வேறு ஒரு கார் நிறுவனத்தின் தயாரிப்பு கைப்பற்றியது. அந்த கார் மாடல் எது என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் இந்த செய்தித்தொகுப்புகள் செல்லலாம்.

 10. மாருதி சுஸுகி செலிரியோ

10. மாருதி சுஸுகி செலிரியோ

கடந்த 2015ம் ஆண்டில் 82,961 செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு 90,481 செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 9.1 சதவீதம் கூடுதலாகும். பட்ஜெட் விலையில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் கிடைப்பதுதான் செலிரியோ காரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

 2016ம் ஆண்டில் விற்பனையில் டாப் 10 கார்கள்!

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருந்து வரும் மாருதி செலிரியோ கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. மேலும், பெட்ரோல் மாடல் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைப்பதும் இந்த காருக்கான வரவேற்பை அதிகரித்துள்ளது. டீசல் மாடல் விற்பனை நிறுத்தப்படுவதாக ஒரு பேச்சு இருந்தாலும், கடந்த ஆண்டு வாடிக்கையாளர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கும் மாடல்களில் மாருதி செலிரியோ காரும் ஒன்றாக இருக்கிறது. செலிரியோ பெட்ரோல் மாடலில் 1.0 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 800சிசி எஞ்சினும் உள்ளது. டீசல் மாடலில் இருக்கும் எஞ்சின் திறன் போதுமானதாக இல்லை என்ற கருத்து பரவலாக இருக்கிறது.

09. ஹூண்டாய் க்ரெட்டா

09. ஹூண்டாய் க்ரெட்டா

அறிமுகம் செய்த நாளில் இருந்தே ஹூண்டாய் க்ரெட்டாவிற்கான வரேவற்பு எகிடுதகிடாக உள்ளது. இதனால், கடந்த 2016ம் ஆண்டில் விற்பனையில் மிகச் சிறப்பான இடத்தை பதிவு செய்துள்ளது. கவர்ச்சிகரமான தோற்றம், அதிக வசதிகள், சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

 2016ம் ஆண்டில் விற்பனையில் டாப் 10 கார்கள்!

கடந்த ஆண்டு 92,926 ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹூண்டாய் க்ரெட்டா கார் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் தேர்வு செய்து கொள்ளலாம். 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. வாடிக்கையாளர்களின் மனங்கவர்ந்த மாடலாக இருக்கிறது.

08. ரெனோ க்விட்

08. ரெனோ க்விட்

டாப் 10 பட்டியலை மாருதியும், ஹூண்டாயும் பங்கு போட்டுக் கொண்டுவிட்ட நிலையில், தப்பு முதல் போல இடம்பிடித்திருக்கும் ஒரேயொரு மாடல் ரெனோ க்விட். கடந்த ஆண்டு 1,05,745 க்விட் கார்களை ரெனோ விற்பனை செய்துள்ளது. அதாவது, க்விட் காரின் வருகையால் அந்த நிறுவனத்தின் தலையெழுத்தே மாறிவிட்டது. இப்போது அந்த நிறுவனம் மிகச் சிறப்பான வர்த்தகத்தை பதிவு செய்து வருகிறது.

 2016ம் ஆண்டில் விற்பனையில் டாப் 10 கார்கள்!

ரெனோ க்விட் காரின் டிசைனும், விலையும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. அத்துடன், டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் போன்ற சிறப்பம்சங்களும் வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்க காரணம். 800சிசி பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் தவிர்த்து சமீபத்தில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலும் வந்துவிட்டது. அத்துடன், ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இப்போது இருப்பதால், ரெனோ க்விட் கார் ஜாம்பவான் மாடல்களை ஒரு கை பார்த்து வருகிறது.

 07. மாருதி பலேனோ

07. மாருதி பலேனோ

பிரிமியம் ஹேட்ச்பேக் கார் செக்மென்ட்டில் மாருதி பலேனோ மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. மாருதி நிறுவனத்தின் நெக்ஸா பிரிமியம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த கார் டிசைன், இடவசதி, வசதிகள், எஞ்சின், விலை என அனைத்து விதத்திலும் மிகச் சரியான தேர்வாக அமைந்துள்ளது.

 2016ம் ஆண்டில் விற்பனையில் டாப் 10 கார்கள்!

கடந்த ஆண்டு 1,07,066 மாருதி பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மாருதியின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை இந்த கார் வழங்கி வருகிறது. சிறப்பான டிசைன், வசதிகள், நம்பகமான எஞ்சின் ஆப்ஷன்கள் ஆகியவை இந்த காருக்கான வரவேற்பை அதிகரித்து கொடுத்துள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்ரும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் மட்டுமே கிடைக்கிறது. டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்று இருக்கிறது.

06. ஹூண்டாய் எலைட் ஐ20

06. ஹூண்டாய் எலைட் ஐ20

இந்திய கார் மார்க்கெட்டின் ஆணழகன் என்று நாம் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. அதன்படியே, விற்பனைக்கு வந்து ஆண்டுகள் ஓடினாலும், விற்பனையில் கட்டுக் குலையாமல் வைத்திருக்கிறது ஹூண்டாய் எலைட் ஐ20 கார். மிக சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்கள் மற்றும் வசதிகளும் இந்த காருக்கான வரவேற்பை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

 2016ம் ஆண்டில் விற்பனையில் டாப் 10 கார்கள்!

கடந்த 2015ம் ஆண்டில் 1,30,084 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டில் 1,22,491 எலைட் ஐ20 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. மாருதி பலேனோ காரின் வரவால் சிறிய சரிவு ஏற்பட்டிருப்பது தவிர்க்க முடியாது. இருப்பினும், மாருதி பலேனோ காரை விற்பனையில் விஞ்சியிருக்கிறது.

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

இந்திய மார்க்கெட்டில் மட்டுமின்றி, ஏற்றுமதியிலும் சிறப்பான கார் மாடலாக இருந்து வருகிறது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார். கச்சிதமான வடிவமைப்பு, அதிக வசதிகள், சரியான விலை போன்றவை இந்த காருக்கான வரவேற்பு குறையாமல் வைத்திருக்கிறது.

 2016ம் ஆண்டில் விற்பனையில் டாப் 10 கார்கள்!

கடந்த 2015ம் ஆண்டில் 1,24,055 கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த ஆண்டு 1,36,187 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனையாகி உள்ளன. இது 9.8 சதவீதம் கூடுதல் என்பதுடன், டாப் 10 பட்டியலில் 6வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.1 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

04. மாருதி ஸ்விஃப்ட்

04. மாருதி ஸ்விஃப்ட்

ஹேட்ச்பேக் கார் வாங்க நினைக்கும் இந்தியர்களின் முதல் சாய்ஸ் மாருதி ஸ்விஃப்ட். துள்ளலான தோற்றம், சிறப்பான கையாளுமை, அதிசெயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் அதிக மைலேஜ் ஆகியவை இந்த காரின் மதிப்பை தூக்கிப் பிடித்துள்ளது.

 2016ம் ஆண்டில் விற்பனையில் டாப் 10 கார்கள்!

கடந்த 2015ம் ஆண்டில் 2,06,924 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு 1,68,555 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகி உள்ளன. மாருதி பலேனோ காரின் வரவு, ஸ்விஃப்ட் காரின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இருப்பினும், விரைவில் புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டிருக்கும் ஸ்விஃப்ட் கார் வர இருப்பது கார் பிரியர்களின் ஆவலைத் தூண்டி உள்ளது.

03. மாருதி வேகன் ஆர்

03. மாருதி வேகன் ஆர்

மாருதி நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் மாடல். நகர்ப்புற பயன்பாட்டுக்கு மிகச் சிறந்த பட்ஜெட் கார் மாடலாக விளங்குகிறது. கடந்த ஆண்டு 1,73,286 மாருதி வேகன் ஆர் கார்களை மாருதி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

 2016ம் ஆண்டில் விற்பனையில் டாப் 10 கார்கள்!

டால்பாய் டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த கார் உயரமானவர்களுக்கும் ஏற்ற ஹேட்ச்பேக் கார். 4 பேர் செல்வதற்கு சிறப்பான இடவசதி, அதிக வசதிகள் உள்ளன. இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. சிஎன்ஜி மாடலிலும் கிடைக்கிறது.

02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

போட்டி மிகுந்த காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் விற்பனையில் கோலோய்ச்சி வரும் மாருதி டிசையர் கார் டாப் - 10 பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 2,02,076 டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. போட்டி அதிகரித்ததால், விற்பனையில் 14.4 சதவீதம் சரிவு காணப்பட்டது. இருப்பினும், தனது ஆஸ்தான இரண்டாவது இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

 2016ம் ஆண்டில் விற்பனையில் டாப் 10 கார்கள்!

குறைவான பராமரிப்பு செலவீனம், நம்பகமான எஞ்சின் ஆகியவற்றுடன் மிகச் சரியான விலையில் கிடைக்கிறது. 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் தேர்வு செய்ய முடியும்.

01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

மாருதி ஆல்ட்டோ காரை குறிவைத்து பல புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும், ஆல்ட்டோ காரின் விற்பனை தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டு 2,45,094 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி உள்ளன. ரெனோ க்விட் வருகையால் விற்பனையில் சிறிது தொய்வு ஏற்பட்டிருந்தாலும் கூட, கவலை கொள்ளாமல் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

 2016ம் ஆண்டில் விற்பனையில் டாப் 10 கார்கள்!

மாருதி நிறுவனத்தின் சிறப்பான சர்வீஸ் மையங்களின் கட்டமைப்பு, குறைவான பராமரிப்பு செலவு உள்ளிட்டவை இந்த காருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்துள்ளது. இந்த கார் 800சிசி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாகவும் வருகிறது. உலக அளவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்களில் மாருதி ஆல்ட்டோ காரும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று அறிமுகமாகும் புதிய டாடா ஹெக்ஸா காரின் ஆல்பம்!

இன்று விற்பனைக்கு அறிமுகமாக இருக்கும் புதிய டாடா ஹெக்ஸா காரின் படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
English summary
India’s best selling cars 2016 was led by the largest carmaker Maruti Suzuki with six models followed by Hyundai’s three models. Here are the top 10 selling cars in 2016.
Story first published: Wednesday, January 18, 2017, 10:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X