விற்பனையில் இந்தியாவின் டாப்-5 காம்பேக்ட் எஸ்யூவி மாடல்கள்!

கடந்த மாதத்தில் விற்பனையில் டாப்-5 காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களுக்கான வரவேற்பு உங்களுக்கு தெரிந்ததே. இந்த நிலையில், புதிய மாடல்களின் வரவால் இந்த செக்மென்ட்டில் இப்போது கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டிகளை சமாளித்து, கடந்த ஜனவரி மாதம் விற்பனையில் முதல் 5 இடங்களை பிடித்த அந்த டாப்-5 காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.

05.ரெனோ டஸ்ட்டர்

இந்தியாவின் முதல் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக களமிறக்கப்பட்ட ரெனோ டஸ்ட்டர் துவக்கத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. தனித்துவமும், வலிமையும் நிறைந்த தோற்றம், சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்கள், வசதிகள் என வாடிக்கையாளர்களின் நம்பர்-1 சாய்ஸாக மாறியது. இந்த நிலையில், தற்போது புதிய மாடல்களால் சற்று பின்தங்கிவிட்டது. இருப்பினும், தனக்கென தனி வாடிக்கையாளர் வட்டத்துடன் விற்பனையை தக்க வைத்து வருகிறது.

கடந்த மாதம் 1,279 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எஸ்யூவியானது 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் இருவிதமான சக்தியை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டதாக கிடைக்கிறது. இந்த எஸ்யூவி 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கிறது.

04. மஹிந்திரா டியூவி300

பீரங்கியின் தாத்பரியத்தை மனதில் வைத்து வடிவமைத்துள்ளதாக மஹிந்திரா தெரிவித்த டியூவி300 எஸ்யூவியும் தொடர்ந்து விற்பனையில் நல்ல எண்ணிக்கையை பெற்று வருகிறது. லேடர் ஃப்ரேம் எனப்படும் எஸ்யூவி கார்களுக்கான பிரத்யேக சேஸீ அமைப்புடன் வந்த இந்த மாடல் மிக கம்பீரமான தோற்றத்தை கொண்டுள்ளது. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக இருந்தாலும், இந்த எஸ்யூவியில் 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதி உள்ளது.

கடந்த மாதத்தில் 2,408 மஹிந்திரா டியூவி300 எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எஸ்யூவியில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவியின் எஞ்சினும் இரண்டு விதமான சக்தியை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த மாடல்களில் கிடைக்கிறது. 4 மீட்டருக்கும் குறைவான எஸ்யூவி மாடல்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாகவும் கிடைக்கிறது. ஆனால், இந்த மாடல் ஆர்டரின் பேரில் டெலிவிரி தரப்படுகிறது.

03. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய எஸ்யூவி மாடல். மிடுக்கான தோற்றம், எக்கச்சக்க வசதிகள், சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த எஸ்யூவி கையாளுமைக்கும் பெயர் பெற்றது.

கடந்த மாதத்தில் 3,761 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகள் விற்பனையாகி உள்ளன. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியானது 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஓட்டுனர் பக்கத்திற்கான ஏர்பேக்குகள் அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்படுகிறது.

02. ஹூண்டாய் க்ரெட்டா

இந்தியாவின் சூப்பர்ஹிட் எஸ்யூவி மாடலாக ஹூண்டாய் க்ரெட்டா விளங்குகிறது. க்ரெட்டாவின் தோற்றமும், வசதிகளும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

கடந்த மாதம் 7,918 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி மாடல்கள் விற்பனையாகி உள்ளன. ஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கிறது.

01. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் லேட்டஸ்ட்டாக மார்க்கெட்டுக்கு வந்தாலும், இந்த எஸ்யூவி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது. மாதத்திற்கு சராசரியாக 8,500 பிரெஸ்ஸா கார்கள் விற்பனையாகி வருகிறது.

கடந்த ஜனவரி மாதத்தில் 8,932 மாருதி பிரெஸ்ஸா கார்கள் விற்பனையாகி உள்ளன. இந்த எஸ்யூவியில் ஓட்டுனர் பக்கத்திற்கான ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்று இருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களும் இந்த காரில் உண்டு.

 

 

புதிய ஜீப் ரேங்லர் ரூபிகன் ரெக்கான் எஸ்யூவியின் படங்கள்!

ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஆஃப்ரோடு மாடலாக வெளியிடப்பட்டுள்ள புதிய ரேங்லர் ரூபிகன் ரெக்கான் எஸ்யூவியின் உயர் தர படங்களை கேலரியில் காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Maruti Suzuki Vitara Brezza was launched last year and it immediately bettered the sales of Ford EcoSport before overtaking Hyundai Creta as well.
Please Wait while comments are loading...

Latest Photos