விற்பனையில் அசத்திய டாப்- 9 கார் நிறுவனங்கள்!

விற்பனையில் முன்னிலை வகிக்கும் கார் நிறுவனங்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழக்க செய்யப்பட்டதற்கு பின்னர் கார் மார்க்கெட் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி இருக்கிறது. கடந்த மாதம் பல முன்னணி கார் நிறுவனங்கள் சாதகமான விற்பனையை பதிவு செய்துள்ளன.

கடந்த மாதத்தில் விற்பனையின் அடிப்படையில் முதல் 9 இடங்களை பிடித்த நிறுவனங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

09. ஃபோக்ஸ்வேகன்

09. ஃபோக்ஸ்வேகன்

கடந்த மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார் விற்பனை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3,570 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த மாதத்தில் 4,792 கார்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

 விற்பனையில் அசத்திய டாப்-8 கார் நிறுவனங்கள்!

விற்பனை வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்வதற்கு புதிய மாடல்களையும் களமிறக்க திட்டமிட்டு இருக்கிறது. கடந்த மாதம் புதிய டிகுவான் எஸ்யூவியின் உற்பத்தியை அவுரங்காபாத்தில் உள்ள தனது ஆலையில் துவங்கி இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

08. நிஸான் மற்றும் டட்சன்

08. நிஸான் மற்றும் டட்சன்

கடந்த மார்ச் மாதத்தில் நிஸான் மற்றும் டட்சன் கார்களின் விற்பனை 21 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 5,309 கார்களை விற்பனை செய்திருக்கிறது நிஸான் நிறுவனம். டட்சன் ரெடி-கோ கார் விற்பனையில் முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது.

 விற்பனையில் அசத்திய டாப்-8 கார் நிறுவனங்கள்!

விற்பனையை அதிகரிக்கும் வண்ணம் ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை நிஸான் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் 174 நகரங்களில் 279 விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை அமைத்துள்ளது.

 07. ரெனோ இந்தியா

07. ரெனோ இந்தியா

கடந்த மாதத்தில் ரெனோ நிறுவனத்தின் கார் விற்பனை 1.8 சதவீதம் சரிவு கண்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 12,434 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த மாதத்தில் 12,188 கார்களை விற்பனை செய்துள்ளது.

 விற்பனையில் அசத்திய டாப்-8 கார் நிறுவனங்கள்!

சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த க்விட் கார் ரெனோ நிறுவனத்தின் விற்பனையில் பெரும் பங்களிப்பை கொடுத்து வருகிறது. க்விட் காருக்கு தோள் கொடுக்க வேறு கார் மாடல் இல்லாத காரணத்தால் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அந்த நிறுவனம் பெற முடியவில்லை.

06. டாடா மோட்டார்ஸ்

06. டாடா மோட்டார்ஸ்

கடந்த மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு கார் விற்பனை 84 சதவீதம் அதிகரித்தது. கடந்த மாதத்தில் 15,433 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. டாடா டியாகோ கார் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது.

05. ஹோண்டா கார் நிறுவனம்

05. ஹோண்டா கார் நிறுவனம்

கடந்த மாதம் ஹோண்டா கார் நிறுவனத்தின் விற்பனை 8.7 சதவீதம் உயர்ந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 17,430 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த மாதமம் 18,950 கார்களை விற்பனை செய்துள்ளது.

 விற்பனையில் அசத்திய டாப்-8 கார் நிறுவனங்கள்!

கடந்த மாதத்தில் 6,271 சிட்டி கார்கள், 3,833 டபிள்யூஆர்வி கார்கள், 3,527 ஜாஸ் கார்கள், 3,296 அமேஸ் கார்கள் மற்றும் 1,436 பிஆர்வி எஸ்யூவி கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த மாதம் 540 பிரியோ கார்கள் விற்பனையாகி உள்ளதாக ஹோண்டா கார் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

04. ஃபோர்டு இந்தியா

04. ஃபோர்டு இந்தியா

கடந்த மாதத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் விற்பனை 17 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 21,198 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த மாதம் 24,832 கார்களை விற்பனை செய்துள்ளது.

 விற்பனையில் அசத்திய டாப்-8 கார் நிறுவனங்கள்!

உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி, ஏற்றுமதியும் 18 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ஆஸ்பயர், ஃபிகோ உள்ளிட்ட கார்கள் விற்பனையில் பக்கபலமாக இருந்து வருகின்றன.

 03. மஹிந்திரா

03. மஹிந்திரா

கடந்த மாதம் மஹிந்திரா நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை சற்று சரிவு கண்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 26,885 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த மாதத்தில் 25,352 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

 விற்பனையில் அசத்திய டாப்-8 கார் நிறுவனங்கள்!

இதனிடையே, கடந்த மாதம் மஹிந்திரா நிறுவனத்தின் பிஎஸ்-3 வாகன மாடல்களான பொலிரோ டிஐ, தார் டிஐ மற்றும் ஸ்கார்ப்பியோ கேட்வே பிக்கப் போன்ற மாடல்களுக்கு அதிகப்படியான தள்ளுபடியை கொடுத்து இருப்பை கழித்துக் கட்டும் முயற்சியில் மஹிந்திரா ஈடுபட்டது. அதற்கு எந்தளவு பலன் கிட்டியது என்பது குறித்து தகவல் இல்லை.

 02. ஹூண்டாய்

02. ஹூண்டாய்

கடந்த மாதம் ஹூண்டாய் கார் விற்பனை 8 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 51,452 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த மாதத்தில் 55,614 கார்களை விற்பனை செய்துள்ளது.

 விற்பனையில் அசத்திய டாப்-8 கார் நிறுவனங்கள்!

க்ரெட்டா, எலைட் ஐ20, கிராண்ட் ஐ10 உள்ளிட்ட கார் மாடல்கள் ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகின்றன. அந்த நிறுவனத்தின் விற்பனை ஸ்திரமாக இருப்பதற்கு இந்த மாடல்கள் முக்கிய காரணம். மேலும், ஏற்றுமதியின் மூலமாக கூடுதல் வருவாய் பெறுவதற்கும் முன்னுரிமை அளித்து வருகிறது.

01. மாருதி சுஸுகி

01. மாருதி சுஸுகி

கடந்த மாதத்தில் மாருதி கார் நிறுவனத்தின் விற்பனை 7.7 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாததத்தல் 1,29,345 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த மாதத்தில் 1,39,763 கார்களை விற்பனை செய்திருக்கிறது.

 விற்பனையில் அசத்திய டாப்-8 கார் நிறுவனங்கள்!

உள்நாட்டு விற்பனையை மட்டும் பார்க்கப்போனால், 7.7 சதவீத வளர்ச்சியை மாருதி பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு உள்நாட்டில் 1,18,895 கார்களை விற்பனை செய்திருந்த மாருதி நிறுவனம், கடந்த மாதம் 1,27,999 கார்களை விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆல்ட்டோ, எர்டிகா, விட்டாரா பிரெஸ்ஸா, ஓம்னி, பெலினோ உள்ளிட்ட மாடல்கள் முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகின்றன.

Most Read Articles
English summary
Top Car Manufacturers By Sales In March 2017. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X