மேம்படுத்தப்பட்ட புதிய டொயோட்டா 2017 கரோலா ஆல்டிஸ் கார் அறிமுகம்

Written By:

ஜப்பானைச் சேர்ந்த பிரபல டொயோடா நிறுவனத்தின் இந்திய பிரிவான டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட புதிய '2017 கரோலா ஆல்டிஸ்' காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

டொயோட்டா கரோலா ஆல்டிஸ் இந்தியாவில் தனது செக்மெண்டின் நன்கு விற்பனையாகும் ஒரு செடன் காராகும். தற்போது அதன் போட்டியாளர்கள் நெருங்காத வண்ணம் புதிய ஸ்டைலிங் மற்றும் புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் கரோலா ஆல்டிஸ் மேம்படுத்தப்பட்டுள்ளது.

முகப்பில் பல்வேறு புதிய மாற்றங்களை கண்டுள்ளது புதிய கரோலா ஆல்டிஸ். இதில் பகல்நேரத்தில் எரியும் விதத்தில் கூடிய புதிய பை-பீம் எல்ஈடி முகப்பு விளக்குகள், 3டி பம்பர் டிசைன், அகலமான கிரில் அமைப்பு, கிரோம் அமைப்பில் பொருந்திய ஃபாக் லைட்டுகள் உள்ளது.

2017 கரோலா ஆல்டிஸ் காரில் ஸ்டைலிஷ் ஆன 16 இஞ்ச் அலாய் வீல்கள், இண்டிகேட்டருடன் கூடிய எலக்ட்ரானிக் அட்ஜஸ்டபிள் ரியர் வியூ சைடு மிர்ரர்கள் (ஓவிஆர்எம்) புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மறுவடிவமைப்பு பெற்ற எல்ஈடி ரியர் லைட்டுகளைத் தவிர பின்புறத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை.

ரெக்லைனிங் சீட்

2017 கரோலா ஆல்டிஸ் காரில் ஸ்டைலிஷ் ஆன 16 இஞ்ச் அலாய் வீல்கள், இண்டிகேட்டருடன் கூடிய எலக்ட்ரானிக் அட்ஜஸ்டபிள் ரியர் வியூ சைடு மிர்ரர்கள் (ஓவிஆர்எம்) புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மறுவடிவமைப்பு பெற்ற எல்ஈடி ரியர் லைட்டுகளைத் தவிர பின்புறத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை.

இதன் உட்புறம் அதிக இடவசதி கொண்டதாக இருக்கிறது. புதிய டோனில் இண்டீரியர் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சாஃப்ட் டச் வசதி கொண்ட முற்றிலும் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் கொடுகப்பட்டுள்ளது.

பல்வேறு சிறப்புகள் பொருந்திய காராகவே கரோலா ஆல்டிஸ் உள்ளது. பாதுகாப்புக்கு அதிமுக்கியத்துவம் தரும் வகையில் 7 ஏர்பேக்குகள், மலைச்சாலையில் செல்லும் போது பாதுகாப்பு தரும் ‘ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட்', ‘வெஹிகிள் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்' எலெக்ட்ரானிக் முறையில் கண்ட்ரோல் செய்யப்படும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய தொழில்நுட்ப அம்சங்களும் உள்ளது.

2017 கொராலா ஆல்டிஸ் கார் ஏற்கெனவே கிடைக்கக்கூடிய ‘ஒயிட் பேர்ல் கிரிஸ்டல் ஷைன்', ‘சில்வர் மைகா மெட்டாலிக்', ‘ஷேம்பைன் மைகா மெட்டாலிக்', ‘கிரே மெட்டாலிக்' ‘சூப்பர் ஒயிட்' ‘செலஸ்ஸியல் பிளாக்' ஆகிய 6 வண்ணங்களோடு புதிய ‘ஃபேண்டம் பிரவுன்' என்ற புதிய வண்ணத்திலும் கிடைக்கிறது.

புதிய கரோலா ஆல்டிஸ் கார் இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. 1.8 லிட்டர் டூயல் விவிடி-ஐ பெட்ரோல் மாடல் எஞ்சின், அதிகபட்சமாக 138 பிஹச்பி ஆற்றலையும், 173 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது. ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆஃப்ஷனலாகவும் கிடைக்கிறது.

டீசல் மாடலில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.4 லிட்டர் டர்போசார்ஜுடு இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 88 பிஹச்பி ஆற்றலையும், 205 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாகும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது.

புதிய கரோலா ஆல்டிஸ் காரின் பெட்ரோல் மாடல் 5.87 லட்ச ரூபாய் முதல் 19.91 லட்ச ரூபாய் விலையில் கிடைக்கிறது. இதன் டீசல் மாடல் 17.36 லட்ச ரூபாயில் இருந்து 19.05 லட்ச ரூபாய் என்ற விலையில் கிடைக்கிறது. ( இரண்டும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை ஆகும்)

விலைப்பட்டியல்

பெட்ரோல்:

ஜி (எம்டி) - ரூ.15,87,500
ஜி (சிவிடி) - ரூ. 17,52,500
ஜிஎல் (எம்டி) - ரூ.18,30,500
விஎல் (சிவிடி) - ரூ. 19,91,500

டீசல்:

டிஜி (எம்டி) - ரூ. 17,36,000
டிஜிஎல் (எம்டி) - ரூ.19,05,000

 

இது தொடர்பாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ராஜா கூறுகையில், "உலகளவில் டொயோட்டா நிறுவனத்தின் சிறந்த விற்பனை ஆகும் காரான கரோலா ஆல்டிஸ், இந்தியாவில் செக்மெண்ட் லீடராக உள்ளது"

இந்தியாவின் பிரபலமான கார்களில் ஒன்றாக வளர்ந்துள்ள கரோலா ஆல்டிஸ், பிரிமீயம் சி செடன் செக்மெண்டில் 40 சதவீத பங்களிப்பை அளித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

டோல்கேட் கட்டணம் ரூ. 4 லட்சம்: மருத்துவருக்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்த ‘சுங்கச்சாவடி' ஊழியர்!

புதிய பஜாஜ் டோமினார்400 பைக்கின் படங்கள்: 

English summary
Toyota Kirloskar Motor has launched the facelifted 2017 Corolla Altis in the Indian market. Prices start at Rs 15.87 lakh ex-showroom (Delhi).
Please Wait while comments are loading...

Latest Photos