புதிய டொயோட்டா 2017 பிரையஸ் இந்தியாவில் அறிமுகம்

டொயோட்டா நிறுவனத்தின் நான்காம் தலைமுறை பிரையஸ் மாடல் கார் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. அதன் விவரங்களை காணலாம்.

Written by: Super Admin

டொயோட்டா நிறுவனத்தின் நான்காம் தலைமுறை பிரையஸ் மாடல் கார் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. அதன் விவரங்களை காணலாம்.

முந்தைய பிரையஸ் மாடலில் இருந்து முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட புத்தம் புதிய கவர்ச்சிகரமான தோற்றத்துடன் ஹைபிரிட் செடனாக வெளிவந்திருக்கிறது டொயோட்டா பிரையஸ்.

இதில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.8 லிட்டர் பெட்ரோல் இஞ்சின், மின் மோட்டாருடன் இணைப்பு பெற்று 132 பிஹச்பி திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக வடிவமைப்பு பெற்றுள்ளது. சிவிடி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட பிரையஸ் லிட்டருக்கு 26.27 கிமீ மைலேஜ் தரவல்லது.

உட்புறம் முழுவதும் லெதர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, டச் ஸ்கிரீன்  இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10 ஸ்பீக்கர் கொண்ட ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம், டூயல் டோன் டெம்பரேச்சர் கண்ட்ரோல் உள்ளிட்ட எண்ணற்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பை பொருத்தமட்டிலும் பிரையஸ் மாடலுக்கு டோயோட்டா அதிமுக்கியத்துவம் அளித்துள்ளது, இதில் விபத்தின் போது காப்பாற்றும் வகையில் 7 ஏர் பேக்குகள், ஏபிஎஸ், சாலையில் சிறந்த அனுபவத்திற்கான ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ட்ரேக்க்ஷன் கண்ட்ரோல் போன்ற முக்கிய வசதிகளையும் கொண்டதாக பிரையஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா அகாட்ர்ட் ஹைபிரிட் கார்களுக்கு போட்டியாக விளங்கப்போகும் டொயோட்டா பிரையஸ் ரூ. 38.96 லட்சம் (டெல்லி எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் கிடைக்கும்.

புதிய 2017 டொயோட்டா பிரையஸ் கார் படங்கள்:

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Fourth-Generation Toyota Prius Launched In India. The all-new Toyota Prius Hybrid sedan features a new design and a revised powertrain.
Please Wait while comments are loading...

Latest Photos