புதிய டொயோட்டா வியோஸ் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகம்!

ஹோண்டா சிட்டி காருக்கு நேர் போட்டியான புதிய மாடலை டொயோட்டா கார் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள அந்த கார் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

Written By:

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் சரியான மாடல் இல்லாமல் டொயோட்டா கார் நிறுவனம் தவித்து வருகிறது. இந்த மார்க்கெட்டில் கோலோய்ச்சி வரும் ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியை தர முடியாத நிலையில்தான் டொயோட்டா எட்டியோஸ் கார் உள்ளது. இந்த நிலையில், இந்த செக்மென்ட்டில் தகுதியான புதிய மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது டொயோட்டா.

வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் டொயோட்டா வியோஸ் கார்தான் தற்போது ஹோண்டா சிட்டி காருக்கு இணையான ரகத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கடந்த வாரம்தான் டொயோட்டா வியோஸ் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் தாய்லாந்தில் அறிமுகம் செய்யபப்பட்டது. இதே மாடல் தற்போது இந்தியாவுக்கும் வர இருக்கிறது.

புதிய டொயோட்டா வியோஸ் கார் வசதிகளிலும், சிறப்பம்சங்களிலும் ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் கார்களுக்கு சரியான போட்டியாக இறுக்கும். டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் கார் போன்றே, இப்போது டொயோட்டா வியோஸ் காரின் முன்பக்கம் புதுப்பொலிவு கொடுக்கப்ப்டடு, கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர ரன்னிங் விளக்குகள், எல்இடி பனி விளக்குகள் போன்றவற்றுடன் மிகவும் பிரிமியம் கார் மாடலாக காட்சியளிக்கிறது. முகப்பு வடிவமைப்பும் மிக வசீகரமாக இருக்கிறது. புதிய டொயோட்டா வியோஸ் கார் 6 வண்ணங்களில் பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் கிடைக்கிறது. இந்த காரில் 15 இன்ச் மற்றும் 16 இன்ச் அலாய் வீல்களுடன் வந்துள்ளது.

உட்புறத்தில் 2 டின் மியூசிக் சிஸ்டம், 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. கீ லெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் வசதி, லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் 4 விதமான வண்ணத் தேர்வுகள் கொண்ட இன்டீரியருடன் கிடைக்கும்.

புதிய டொயோட்டா வியோஸ் காரில் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிரானக்ஷன் கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், பிரேக் அசிஸ்ட், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட் போன்ற பாதுகாப்பு வசதிகள் உள்ளன. மோதல்களின்போது பயணிகளை காக்கும் விசேஷ கட்டமைப்பு கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய டொயோட்டா வியோஸ் காரில் 108 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வரும். டீசல் மாடலிலும் விற்பனைக்கு கிடைக்கும். ஆனால், டீசல் எஞ்சின் விபரம் குறித்த முழுமையானத் தகவல் இல்லை.

இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய டொயோட்டா வியோஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் விலைப் பட்டியலில் எதிர்பார்க்கப்படுகிறது.

 

புதிய யமஹா எஃப்இசட்25 பைக்கின் படங்கள்!

புதிய யமஹா எஃப்இசட்25 பைக்கின் பிரத்யேக படங்களின் தொகுப்பை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Japanese automaker Toyota has launched the 2017 Vios in Thailand and according to reports the sedan will hit the Indian shores by late-2017 or early 2018.
Please Wait while comments are loading...

Latest Photos