ஜிஎஸ்டியின் கீழ் சிறிய கார்களுக்கான வரி 5 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு..!

Written By:

ஜூலை 1 முதல் இந்தியாவில் பொருட்கள் மற்றும் சேவை வரிவிதிப்பு (ஜி.எஸ்.டி) அமல்படுத்தப்படுகிறது. இதனால் சிறிய மற்றும் நடுத்தர அளவுக்கொண்ட கார்களின் விலை உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஜி.எஸ்.டியில் வரி சதவீதம் பொருட்களுக்கு ஏற்றவாறு 5, 12, 18 மற்றும் 28 என நான்கு விகிதப் பிரிவுகளில் எதை இறுதியாக்கலாம் என மத்திய அரசு தற்போது தீவிர பரிசீலனையில் ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையில் மாநில அரசின் கீழ் அதிகாரமுள்ள குறைந்த பத்து பொருட்கள் அல்லது சேவைக்களுக்கான வரி விதிப்பு மத்திய அரசின் தலையீடும் இருக்கும் வகையில் புதிய ஜி.எஸ்.டி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இந்த பத்து பொருட்கள் அல்லது சேவைக்கான வரி கொள்கைகளை மத்திய மாநில அரசுகள் இணைந்து உருவாக்கும்.

சிறிய அளவிலான கார்களுக்கு தற்போதிருக்கும் நடைமுறையின் கீழ் 27 முதல் 27.5 வரை வரி விதிப்பு உள்ளது.

மத்திய சுங்க வரி கட்டணம் 12.5 சதவீதம்.

மாநில அரசுகளின் மதிப்புமிக்க கூடுதல் வரி 14.5 முதல் 14 சதவீதம்.

 

தற்போது இதே வரிக்கொள்கை ஜி.எஸ்.டிக்காக மாற்றப்படும் போது சிறியளவிலான கார்களின் வரிவிதிப்பு 27.5 சதவீதத்திலிருந்து கூடுதலாக 5 சதவீதம் பெறும். மொத்தமாக சிறிய அளவிலான கார்களுக்கு 28 சதவீதம் வரிவிதிப்பு இருக்கும்.

இதனால் ஜூலை 1 முதல் சிறிய அளவிலான மாடல் கார்கள், விலை உயரும் சூழ்நிலை உள்ளதாக மத்திய பொருளாதார அமைச்சகத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1500சிசி கொண்ட நடுத்தர அளவு கொண்ட கார்களுக்கு தற்போதைய நிலையில் 24% மத்திய சுங்க வரியாகவும்,மதிப்புமிக்க கூடுதல் வரி 14.5 சதவீதமாகவும் உள்ளது. மொத்தமாக இது 38.5 சதவீதம் வரிவிதிப்பை கொண்டுள்ளது.

எனவே இந்த வகையிலான வாகனங்கள் 28 சதவீத உயர்ந்த வரி விகிதத்தையும், மாநில இழப்பீட்டு வட்டி விகிதத்தையும், தற்போதைய நிலைக்கு ஏற்றவாறு நிர்ணயிக்கப்படும் என மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜி.எஸ்.டிக்காக வகுக்கப்பட்ட சட்டத்தில் பான் மாசாலா, புகையிலை போன்ற பொருட்களுக்கும் மற்றும் ஆடம்பர ஆட்டோமொபைல் போன்ற பொருட்களுக்கும் உச்ச வரி விதிப்பு தீர்வு வகுக்கப்படுகிறது.

இதன்மூலம், முதல் ஐந்து ஆண்டுகளில் ஜிஎஸ்டியை அமல்படுத்துவதால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்வதற்கு ஆடம்பர பொருட்கள் மீதான உச்ச வரி பயன்படும்.

மேலும் எஸ்.யூ.வி கார்களுக்கு தற்போதைய சூழலில் மத்திய சுங்க வரி மற்றும் மதிப்புமிக்க கூடுதல் வரி என மொத்தமாக 41.5 % முதல் 44.5% வரை வசூலிக்கப்படுகிறது.

தற்போது இந்த ரக கார்களுக்கான வரிகொள்கை ஜி.எஸ்.டிக்கு மாற்றப்படும் போது 43 சதவீதமாக உயரலாம். இத மூலம் சில மாடல் கார்களின் விலை குறையும் நிலை உள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜி.எஸ்.டிக்கான வரி கொள்கையில் எஸ்.யூ.வி மாடல் கார்களுக்கான வரியும் குறைக்கப்படும் என்பது திட்டவரையில் இருந்தாலும், அவற்றை சாத்தியமாக்க உற்பத்தியாளர்களின் நடவடிக்கைகளும் முக்கியம்.

English summary
When GST rolled put from july 1st, Small cars may see a small hike in prices. Check out the details of Clicking this...
Please Wait while comments are loading...

Latest Photos