ஹோண்டா நிறுவனத்திற்கு போட்டியாக இந்தியாவில் புதிய கார்களை களமிறக்கும் வோக்ஸ்வேகன்..!

Written By:

ஏற்கனவே திட்டமிட்டது போல, 2017ல் வோக்ஸ்வேகன் நிறுவனம் பல்வேறு புதிய மாடல்கள் கார்களை இந்தியாவில் களமிறக்குகிறது.

இதில் அந்நிறுவனம் தயாரித்துள்ள எஸ்.யூ.வி மாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

போலோ, வென்டோ போன்ற கார்களை தொடர்ந்து இந்தியாவில் ஒரு மாஸான மார்கெட்டை பிடித்துள்ளது வோக்ஸ்வேகன்.

இந்தாண்டில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள டீக்குவான் எஸ்.யூ.வி காருக்கு இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

வோக்ஸ்வேகன் டீக்குவான்

டொயோட்டா ஃபார்ச்சூனர், இசுஸு எம்.யூ-எக்ஸ் ஆகிய மாடல் கார்களுக்கு போட்டியாக சந்தையில் களமிறங்குகிறது டீக்குவான் எஸ்.யூ.வி.

2.0 TDI டீசல் எஞ்சின் கொண்ட இது, 147 பி.எச்.பி பவரை வழங்கும். இந்தியாவில் இது விற்பனைக்கு வந்தால் இதனுடைய விற்பனை உச்சத்தில் இருக்கும்.

ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே இணைப்புகளுடன் கூடிய டிஜிட்டல் தரத்தில் வோக்ஸ்வேகன் டீக்குவியா காரை தயாரித்துள்ளது.

டீலர் குறித்த அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டுவிட்டதாகவும் முடிவெடுக்கப்பட்டு விட்டதாகவும், இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் டீக்குவியா விற்பனை தொடங்கும் என வோக்ஸ்வேகன் இந்தியா தெரிவித்துள்ளது.

வோக்ஸ்வேகன் பஸாட்டு ஜி.டி.இ

ஹோண்டா அக்கார்டு ஹைபிரிட் மற்றும் டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார்களுக்கு போட்டியாக களமிறங்குகிறது பஸாட்டு ஜி.டி.இ.

இந்திய அரசு ஹைபிர்ட் மற்றும் மின்சார திறன் பெற்ற கார்களில் அதிக ஆர்வம் காட்டுவதால், வோக்ஸ்வேகனும் அதற்கு திட்டங்களை வகுத்து வருகிறது.

காம்பேக்ட் சிடான் மாடலான இது சர்வதேச அளவில் ஒரே மாடல் காராக இதை தயாரிக்க வோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

1.4 லிட்டர் பெட்ரோல் மோட்டாருடன் கூடிய மின்சார மோட்டாரும் எஞ்சினில் இடம்பெற்றிருக்கும். இது 215 பி.எச்.பி பவர் மற்றும் 400 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு போலவே வோக்ஸ்வேகன் பஸாட்டு ஜி.டி.இ செடான் கார் உருவாக்கி தரப்படும்.

மின்சார வாகன சந்தையில் இந்தியாவில் புதிய எதிர்பார்ப்பான வோக்ஸ்வேகன் பஸாட்டு ஜி.டி.இ கார் இந்த வருட இறுதியில் விற்பனைக்கு வருகிறது.

 

2017 வோக்ஸ்வேகன் போலோ

6வது தலமுறையாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகிறது வோக்ஸ்வேகன் போலோ. இந்தாண்டின் இறுதியில் அல்லது 2018-ன் தொடக்கத்தில் இது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடுதிரை வசதியுடன் கூடிய இதனுடைய இன்ஃபோடெய்ன்மெண்ட் அமைப்பில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ தொழில்நுட்பங்கள் உள்ளன.

1.5 லிட்டர் திறனில் 2017 போலா பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் இரண்டு மாடல்கள் வெளிவருகிறது. இதில் பெட்ரோல் மாடல் கார் 140 முதல் 160 வரை பி.எச்.பி பவர் வழங்கும் திறன் கொண்டது.

ரூ.5.5 லட்சம் முதல் ரூ.10.5 லட்சம் வரை மாடல்களுக்கு ஏற்றவாறு 2017 போலோ காரின் விலை இருக்கும். மேலும் இந்த மாடல் இந்தியாவில் ஹோண்டா ஜாஸ், சுசிகி பலேனோ மற்றும் ஹூண்டாய் ஐ20 கார்களுக்கு போட்டியாக அமையும்.

2017ல் மட்டுமில்லாமல், 2018ம் ஆண்டிலும் வோக்ஸ்வேகன் பல முக்கிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது. அந்த புதிய மாடல் கார் குறித்த தகவல்களை இனி வரும் வாரங்களில் பார்க்கலாம்.

Story first published: Wednesday, May 17, 2017, 12:46 [IST]
English summary
Upcoming cars of Volkswagen India. 2017 Polo, Vento and Hybrid Passat. Click for details...
Please Wait while comments are loading...

Latest Photos