ஃபோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்த உள்ள டிகுவான் கார் பற்றிய தகவல்கள்

Written By:

இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் செயல்படத்துவங்கிய 10ஆம் ஆண்டை முன்னிட்டு சில புதிய மாடல் கார்களை இந்தாண்டில் அறிமுகப்படுத்த உள்ளது அந்நிறுவனம். இதில் முதலாவதாக களமிறக்கப்படும் காராக 'டிகுவான்' எஸ்யூவி உள்ளது. இது பற்றிய முழுமையாக தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 100 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கிய புதிய எம்க்யூபி பிளாட்ஃபார்மில் இந்த புதிய டிகுவான் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஃபோக்ஸ்வேகனின் முதல் எம்க்யூபி பிளாட்ஃபார்ம் காராக டிகுவான் இருக்கும்.

ஃபோக்ஸ்வேகனின் துணை பிராண்டுகளான ஆடியின் ஏ3, க்யூ2, ஸ்கோடாவின் சூப்பர்ப், கோடியாக் உள்ளிட்ட கார்கள் இந்த புதிய எம்க்யூபி பிளாட்ஃபார்மில் தான் தயாரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2007ஆம் ஆண்டு முதல் டிகுவான் கார்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தயாரித்து வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, கனடா, சீனா போன்ற உலக நாடுகளில் ஏற்கெனெவே அறிமுகமாகி, விற்பனையில் நல்ல நிலையில் இருக்கும் டிகுவான் முதல் முறையாக எம்க்யூபி பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

இந்தியாவில் அறிமுகமாக உள்ள ‘டிகுவான்' கார், 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் கொண்டதாக இருக்கும். இதில் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் இருக்கும், மற்றும் ஐரோப்பிய சந்தையில் கிடைக்கக்கூடிய ‘டிகுவான்'ல் உள்ள அனைத்து பாதுகாப்பு மற்றும் சிறப்பம்சங்களும் இந்திய மாடலிலும் கிடைக்கும் என தெரிகிறது.

டிகுவான் கார் மிக அகலமான தோற்றம் கொண்டுள்ளது. பகல் நேரத்தில் எரியும் வகையிலான எல்ஈடி முகப்பு விளக்கு, அகலமான ஃபாக் லைட்டுகள், பின்புற விளக்கு, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஃபிரண்ட் மற்றும் ரியர் பம்பர்கள் உள்ளது.

மிர்ரர் லிங்க், நேவிகேஷன் வசதியுன் கூடிய 5 இஞ்ச் திரை கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது, இது ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ ஆகியவற்றையும் சப்போர்ட் செய்யும்.

புதிய டிகுவான் கார்கள் வெளிநாட்டில் முற்றிலுமாக அசெம்பிள் செய்யப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. இதனால் போட்டி மாடல்களை ஒப்பிடுகையில் டிகுவான் காரின் விலை சற்று அதிகமாக இருக்கலாம்.

அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இம்மாடல் மீது தனிக்கவனம் செலுத்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டிற்குள் இக்கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யவும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அப்படி அசெம்பிள் செய்யப்பட்டால் இதன் விலை குறைய வாய்ப்பிருக்கிறது.

புதிய டிகுவான் கார் இந்தியாவில் அறிமுகம் ஆகும்போது, இந்த செக்மெண்டில் உள்ள ஃபோர்டு எண்டேவர், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் செவர்லே டிரையல்பிளேசர் கார்களுக்கு கடும் போட்டியாக விளங்கும். விரைவில் இதே செக்மெண்டில் ஸ்கோடா ‘கோடியாக்' மாடலும் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

டிகுவான் காரை வரும் மே மாதத்தில் அறிமுகப்படுத்த உள்ளது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம். மேலும், இதன் புக்கிங்குகள் வரும் ஏப்ரல் மாதல் முதல் துவங்க இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரான புதிய ஐ8 காரின் படங்களை காணலாம்..

English summary
Volkswagen has revealed the India launch details of its new SUV, the Tiguan. Read all the details of the SUV which is due to hit the Indian market.
Please Wait while comments are loading...

Latest Photos