ஓட்டுநரில்லாமல் தானாக இயங்கும் குப்பை லாரி- வால்வோ நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு..!

Written By:

தானியங்கி வாகன தொழில்நுட்பத்தில் முழு மூச்சாக இறங்கியுள்ளது வால்வோ நிறுவனம். முதல் முயற்சியாக தானாக இயங்கக்கூடிய திறன் பெற்ற குப்பை அள்ளும் டிரக்குகளை தயாரித்துள்ளது வால்வோ.

குப்பை மேலாண்மை துறையில் நிபுணத்துவம் பெற்ற ரெனவோ என்ற நிறுவனத்துடன் இணைந்து தானாக இயங்கும் திறன் கொண்ட குப்பை அள்ளும் டிரக்குகளை உருவாக்கியுள்ளது வால்வோ.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் பணியில் ஓட்டுநர்களின் பங்கு குறையும் எனவும், இதன்மூலம் வாழும் பகுதிகளில் தூய்மைக்கான பாதுகாப்பு அதிகரிக்கும் எனவும் வால்வோ தெரிவித்துள்ளது.

குப்பை அள்ளவேண்டிய பகுதிகளில் இந்த டிரக்குகளை ஓட்டுநர் கொண்டு சென்று நிறுத்திவிடுவார். ஓட்டுநர்கள் கட்டளையை கொடுக்க கொடுக்க, டிரக்குகள் சென்சார் உதவியுடன் பணியை தொடங்கும்.

தானாக இயக்கம் கொண்ட டிரக்குகள் பணி செய்யவேண்டிய இடங்களில் ஏற்கனவே சென்சார் பதிக்கப்பட்டு இருக்கும். அவற்றுடன், ஓட்டுநரின் கட்டளைகளை கேட்டு வரைபடங்கள் வாயிலாக டிரக்குகள் செயல்படும்.

வால்வோ தயாரித்துள்ள இந்த டிரக்குகளில் கூடுதல் சிறப்பு என்ன என்றால், ஓட்டுநரின் உத்தரவின் மூலம் டிரக்குகள் தானாகவே ரிவெர்ஸ் செய்துக்கொள்ள முடியும்.

ரிவெர்ஸ் செய்ய வரைப்படங்கள் மற்றும் சாலைகளை ஆராயும் திறன் போன்ற தொழில்நுட்பங்கள் ஜி.பி.எஸ் மூலம் டிரக்குகளில் இணைக்கப்பட்டுள்ளன.

டிரக்குகளின் ஸ்டீயரிங், கியர் மாற்றம் மற்றும் வேகம் என அனைத்தும் தானாக இயங்கக்கூடியவை தான். அதேபோல சூழ்நிலைக்கு தகுந்தவாறு சாலைகளில் டிரக்குகளால் இயங்கும் முடியும் என்கிறது வால்வோ.

வால்வோ நிறுவனம் உருவாகியுள்ள இந்த புதிய தொழில்நுட்பம் ஆட்டோமொபைல் வல்லுநர்கள் கவனத்தை ஈர்துள்ளது.

சில ஸ்வீடன் நாட்டு குடியிருப்பு பகுதிகளில் இதற்கான சோதனையையும் நடத்தி வருகிறது வால்வோ. சோதனையின் போது டிரக்குகள் செயல்பாடு மற்றும் செயல்திறனுடன் பொதுமக்களுடையை கருத்துகளும் கேட்கப்படுகின்றன.

மேலும்... #வால்வோ #volvo
Story first published: Friday, May 19, 2017, 11:58 [IST]
English summary
Volvo's Autonomous Garbage Truck Is Here To Do All Your Dirty Works
Please Wait while comments are loading...

Latest Photos