வால்வோ நிறுவனத்தின் புதிய எஸ்60 போல்ஸ்டார் சொகுசுக் கார் இந்தியாவில் அறிமுகம்..!

வால்வோ நிறுவனம் தனது புதிய எஸ்60 போல்ஸ்டார் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

Written By:

ஸ்வீடனைச் சேர்ந்த பிரபல வால்வோ குரூப், வால்வோ பிராண்டின் கீழ் சொகுசுக் கார்களை தயாரித்து வருகிறது. இந்தியாவில் நீண்ட காலமாக இயங்கி வரும் இந்த வால்வோ, தனது முதல் பெர்ஃபார்மன்ஸ் மாடலான எஸ்60 போல்ஸ்டார் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற வால்வோ இதன் மூலம் இந்தியாவில் போல்ஸ்டார் மாடல் கார் ஒன்றை முதல் முறையாக களமிறக்கியுள்ளது.

வழக்கமான எஸ்60 போல்ஸ்டார் காரில் 6 சிலிண்டர்கள் கொண்ட டி6 இஞ்சின் இருந்தது. இது அதிகபட்சமாக 340 பிஹச்பி ஆற்றலை வழங்கவல்லதாகும். ஆனால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தலைமுறை எஸ்60 போல்ஸ்டார் காரில் இஞ்சின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

புதிய எஸ்60 போல்ஸ்டார் காரில் 4 சிலிண்டர்கள் கொண்ட 2.0 லிட்டர் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 362 பிஹச்பி ஆற்றலையும், 470 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது. பேடில் ஷிப்டர்கள் உடன் கூடிய 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் இதில் உள்ளது.

இஞ்சின் அளவு குறைக்கப்பட்டாலும் முந்தைய மாடல் எஸ்60 போல்ஸ்டார் காரை காட்டிலும் அதிக சக்தி வாய்ந்ததாக இந்த கார் விளங்குகிறது.

அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த புதிய எஸ்60 போல்ஸ்டார், 0-100 கிமீ வேகத்தை வெறும் 4.7 வினாடிகளில் எட்டிவிடுகிறது.

வழக்கமான எஸ்60 போல்ஸ்டார் காரைக்காட்டிலும், 80% கூடுதல் திறன் கொண்ட சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளதால் சொகுசான பயணத்தை அளிக்கிறது.

ஸ்டீரிங் கண்ட்ரோல் மற்றும் ஸ்டீரிங் அனுபவத்தை அதிகரிக்க விஷேச கார்பன் ஃபைபர் பிரேஸ்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் முன்பக்க பம்பர் எடையில் 31 கிலோவும், பின்பக்க பம்பர் எடையில் 15 கிலோ வரையும் குறைக்கப்பட்டுள்ளது.

20 இஞ்ச் அலாய் வீல்கல் கொண்ட இதன் இண்டீரியரில் சொகுசுக்காருக்கு உண்டான தோற்றம் மட்டுமில்லாமல், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து சிறப்பம்சங்களும் இதில் நிரம்பியுள்ளது. கவர்ச்சிகரமான ஸ்போர்ட்ஸ் சீட்கள் அளிக்கப்பட்டுள்ளது.

உட்புறம் முழுவதும் லெதர் வேலைபாடுகள் கொண்டுள்ளது. பாதுகாப்புக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், இரண்டு முன்புற ஏர்பேக்குகள், பயணிகள் ஏர்பேக்குகள் மற்றும் கார் உருண்டால் பாதுகாப்பு தரும் பக்கவாட்டு ஏர்பேக்குகள் உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டுள்ளது.

மல்டிபங்ஷனல் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அவசர கால பிரேக் அஸிஸ்ட் உதவி, போல்ஸ்டார் பிராண்டிங்கிலான கிரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட கியர் லீவர் கவர்ச்சியை மெருகூட்டுவதாக உள்ளது.

வால்வோ எஸ்60 போல்ஸ்டார் கார் ரூ.52.5 லட்சம் (எக்ஸ்ஷோரூம், டெல்லி) என்ற விலையில் கிடைக்கிறது. இது மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி43 காருக்கு போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Read in Tamil about volvo S60 polestar car launch in india. price, mileage, specs and more.
Please Wait while comments are loading...

Latest Photos