இந்தியாவில் பார்ட்னர் தேடும் வால்வோ கார் நிறுவனம்

Written By:

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த வால்வோ கார் நிறுவனம் இந்தியாவில் தனக்கான வரவேற்பை உயர்த்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாட்டில் வால்வோ கார்களை தயாரிக்க தொழிற்சாலை அமைக்கப்படும் வேலைகளை அது துவங்கியுள்ளது.

இதுகுறித்து ET ஆட்டோ இணையதளம் வெளியிட்டு இருக்கும் தகவலின்படி, பி.எம்.டபுள்யூ, மெர்சிடிஸ், ஆடி, ஜாகுவார் போன்ற ஜெர்மன் கார்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உருவாகியுள்ளது. இந்த வரிசையில் இந்தியாவில் தானும் கால்பதிக்கவே வால்வோ தொழிற்சாலை அமைக்கும் பணிகளுக்காக திட்டமிட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வால்வோ காரின் வி40 ஹேட்ச்பேக் கார் இந்த நிறுவனத்தின் தொடக்க மாடலாக உள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.26 லட்சம். அதேபோல் உயரிய மாடலாக வால்வோ எக்ஸ்.சி.90 ஹைபிரிட் எஸ்.யூ.வி கார் உள்ளது. இதனுடைய விலை ரூ.1.26 கோடி.

வால்வோ நிறுவனத்தின் இந்தியாவிற்கான நிர்வாக அதிகாரியாக உள்ள டாம் வான் பான்ஸ்ட்ராஃப் இதுகுறித்து பேசும்போது, "இந்தியாவில் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், வால்வோ தயாரிப்புகளுக்கான வரவேற்பு குறைவாகவே இருந்தாலும், எங்களுக்கு அது வளர்ச்சியை காட்டுகிறது" என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் "இந்தியாவில் வால்வோவிற்கான பிரத்யேக தொழிற்சாலைகளை அமைக்கக்கூடிய பணிகள் விரைவில் தொடங்கப்படும் அதற்கான இறுதி அறிவிப்பு ஸ்வீடன் நாட்டிலுள்ள தலைமை அலுவலகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற பின் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும்" என்று டாம் வான் பான்ஸ்ட்ராஃப் கூறினார்.

எஸ்60, எஸ்90, எக்ஸ்.சி.60 எஸ்.யூ.வி கார் மற்றும் சமீபத்தில் செயல்திறனை மட்டுமே கருத்தில் கொண்டு வெளியிட்டப்பட்ட எஸ்60 போல்ஸ்டார் கார் ஆகியவை வால்வோ நிறுவனத்தின் தயாரிப்பாக இந்திய சந்தையில் பிரபலமாக உள்ள மாடல்கள்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo is looking to start vehicle assembly in India to keep its pricing competitive and bring in more models. Read on.
Please Wait while comments are loading...

Latest Photos