பல சிறம்பம்சங்களுடன் புதிய வால்வோ எக்ஸ்சி60 கார் விரைவில் அறிமுகம்!

ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் புதிய எக்ஸ்சி60 மாடல் காரை அறிமுகப்படுத்த உள்ளது வால்வோ நிறுவனம். அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

ஜெனிவாவில் ஆண்டுதோறும் நடக்கும் ஆட்டோமொபைல் கண்காட்சி மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு நிறுவனத்தாரின் புதிய கார் மாடல்களும் இங்கு முதல் முதலாக பார்வைக்கு வைக்கப்படும். வரும் மார்ச் 7ஆம் தேதி நடக்க இருக்கும் இக்கண்காட்சியில் பல சிறப்பம்சங்கள் பொருந்திய வால்வோ நிறுவனத்தின் புதிய 'எக்ஸ்சி60' கார் அறிமுகமாக உள்ளது.

புதிய வால்வோ எக்ஸ்சி60 கார் விரைவில் அறிமுகம்!

பல்வேறு சிறப்பு தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டிருப்பது புதிய ‘வால்வோ எக்ஸ்சி60' காரின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது. வால்வோ கார்களின் ஆரம்ப மாடல்களில் ‘சிட்டி சேஃப்டி' என்ற பாதுகாப்பு அம்சம் உள்ளது, இதில் புதிதாக தற்போது விபத்தை தடுக்க உதவும் ஸ்டீரிங் சப்போர்ட் கூடிய ஆட்டோமேடிக் பிரேக்கிங் சிஸ்டம் புகுத்தப்பட்டுள்ளது. இது 50கிமீ முதல் 100கிமீ வேகத்தில் செல்லும் போது இயங்கும் வகையிலானது.

புதிய வால்வோ எக்ஸ்சி60 கார் விரைவில் அறிமுகம்!

எக்ஸ்சி60 காரில் மற்றுமொரு முக்கிய அம்சமாக ‘லேன் மிட்டிகேசன்' சேர்க்கப்பட்டுள்ளது. இது சாலையில் வாகனம் செல்லும் போது பாதை (lane) மாறினால் ஓட்டுநரை எச்சரிக்கும், மேலும் சரியான பாதையில் செல்லுமாறு ஸ்டீரிங் அசிஸ்ட் ஓட்டுநரை வலியுறுத்தும்.

புதிய வால்வோ எக்ஸ்சி60 கார் விரைவில் அறிமுகம்!

‘லேன் மிட்டிகேசன்' சிஸ்டமானது ஸ்டீரிங் சப்போர்ட் போன்றே 60கிமீ முதல் 100 கிமீ என்ற வேகத்தில் இயங்கும் போது மட்டுமே செயல்படும்.

புதிய வால்வோ எக்ஸ்சி60 கார் விரைவில் அறிமுகம்!

ஸ்டீரிங் சப்போர்ட் சிஸ்டத்தில் மற்றுமொரு அம்சமாக ‘பிளைண்ட் ஸ்பாட்' என்ற கூடுதல் அம்சம் உள்ளது, இது மற்ற வாகனங்களுடன் மோதாமல் இருக்க ஓட்டுநரை எச்சரிக்கை செய்யும் வகையிலானது.

புதிய வால்வோ எக்ஸ்சி60 கார் விரைவில் அறிமுகம்!

புதிய அம்சங்கள் குறித்து கருத்து தெரிவித்த வால்வோ கார்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவு இயக்குனர் மலின் எக்ஹோல்ம், "பாதுகாப்பை பொருத்தமட்டில் புதிய எக்ஸ்சி60 காரில் அனைத்து விதமான பாதுகாப்பு அம்சங்களையும் சேர்த்துள்ளோம்" என்றார்.

புதிய வால்வோ எக்ஸ்சி60 கார் விரைவில் அறிமுகம்!

2020ஆம் ஆண்டிற்குள் விபத்தில் சிக்கும் வால்வோ கார்களில் உயிரிழப்பு அல்லது காயம் என்ற சம்பவங்களே ஏற்படக்கூடாது என்ற தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் தான் வால்வோ கார்களை சாலை பாதுகாப்பில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வடிவமைக்கப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

போர்சே கேயன்னே காரின் படங்கள்:

Most Read Articles
English summary
“We have all of the benefits of the safety technology we introduced in our larger 90 Series cars in the new XC60.”
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X