உலகின் அதிவேகம் கொண்ட புகாட்டி காரின் வேகத்தை மிஞ்சிய கோ-கார்ட் கார்..!

Written By:

உலகில் உள்ள கார்களிலேயே அதிக வேகம் கொண்டது புகாடி வெய்ரோன் என்ற மாடல் ஆகும். தற்போது இந்த காரின் வேகத்தையே மிஞ்சும் அளவுக்கு எலக்ட்ரிக் கோ-கார்ட் கார் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகின் அதிவேக கார் என்ற பெருமை பெற்ற புகாடி வெய்ரோன் கார், அதிகபட்சமாக 1200 பிஸ் ஆற்றலையும், 1500 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது.

புகாட்டி வெய்ரோன் கார் அதிகபட்சமாக மணிக்கு 431.072 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது ஆகும். இந்தக் கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 2.3 வினாடிகளில் எட்டிப்பிடித்து விடும்.

கார்களிலேயே அதிவேகம் கொண்டதாக புகாட்டி வெய்ரோன் இருந்து வரும் நிலையில் இதனை விட பாதியளவு நேரத்தில் அதிவேகத்தை அடையக்கூடிய கார் ஒன்றினை டேமேக் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

கனடா நாட்டைச் சேர்ந்த டேமேக் நிறுவனம் தயாரித்துள்ள சி5 பிளாஸ்ட் என்பது ஒரு கோ-கார்ட் கார் ஆகும். இது ஒரு எலக்ட்ரிக் கார் என்பது கூடுதல் சிறப்பாகும்.

200கிலோ எடை கொண்ட இந்த காரில் 8 எலக்ட்ரிக் டக்டட் ஃபேன் மோட்டார்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோட்டார்கள் 100 கிலோ மேல்நோக்கி தள்ளும் விசையை அளிக்கிறது.

இந்தக்கார் உலகின் வேகமாக கார் என்ற சிறப்பை புகாட்டி வெய்ரோன் மாடலிடம் இருந்து விரைவில் தட்டிப்பறித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் காரால் 0-100 கிமீ வேகத்தை 1.5 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் எட்டிப்பிடித்துவிட முடியும். இந்நிறுவனத்தின் இணையப்பக்கம் வாயிலாக இந்த காருக்கான புக்கிங் விரைவில் தொடங்க உள்ளது.

இந்தக் காரில் 10,000 வாட் திறன் கொண்ட மோட்டார் உள்ளது. இது காரின் நான்கு வீல்களுக்கும் திறனை அளிக்கிறது. இந்தக்காருக்கு சக்தி அளிப்பது இதில் உள்ள 2,400 வாட்-ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் ஆகும்.

டேமேக் நிறுவனம் தயாரித்துள்ள சி5 பிளாஸ்ட் கார் 59,995 அமெரிக்க டாலர்கள் என்ற விலையில் கிடைக்கும். இது இந்திய மதிப்பி சுமார் 38 லட்ச ரூபாய் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

டேமேக் சி5 பிளாஸ்ட் கார் பரிச்சோதனை செய்யப்படும் வீடியோவை மேலே உள்ள ஸ்லைடரில் காணுங்கள்..

English summary
Read in Tamil about Worlds fastest ko-kart car is much speed than bugati
Please Wait while comments are loading...

Latest Photos