சேன்ட்ரேஸர் 500 ஜி.டி: 518 பிஎச்பி பவருடன் தயாரிக்கப்படும் ஆஃப் ரோடு சூப்பர் கார்..!!

சேன்ட்ரேஸர் 500 ஜி.டி: 518 பிஎச்பி பவருடன் தயாரிக்கப்படும் ஆஃப் ரோடு சூப்பர் கார்..!!

By Azhagar

ஜாரூக் மோட்டார்ஸ் நிறுவனம் ஆஃப் ரோடுகளுக்கான புதிய திறன் பெற்ற சேன்ட்ரேஸர் 500 ஜி.டி என்ற காருக்கான தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ளது.

518 பிஎச்பி பவருடன் தயாராகும் ஆஃப் ரோடு சூப்பர் கார்

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் தான் ஜாரூக் மோட்டார்ஸ். 2015 கிராண்டு ப்ரிக்ஸ் நடைபெற்ற போது சேன்ட்ரேஸர் 500 ஜி.டி என்ற காரை அறிமுகப்படுத்தியது.

Recommended Video

Jeep Wrangler Unlimited
518 பிஎச்பி பவருடன் தயாராகும் ஆஃப் ரோடு சூப்பர் கார்

கரடு முரடான, மணல் நிறைந்த என ஆஃப் ரோடுகளுக்கு ஏற்றவாறு பயணிக்கும் விதத்தில் இந்த காரின் செயல்பாடுகள் இருக்கும் என ஜாரூக் மோட்டார்ஸ் தெரிவித்திருந்தது.

518 பிஎச்பி பவருடன் தயாராகும் ஆஃப் ரோடு சூப்பர் கார்

அறிமுகம் செய்து இரண்டு ஆண்டுகளாக காரின் கட்டமைப்பு பணிகளில் ஜாரூக் கவனம் செலுத்தி வந்தது.

தற்போது இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு சேன்ட்ரேஸர் 500 ஜி.டி காருக்கான தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளது.

518 பிஎச்பி பவருடன் தயாராகும் ஆஃப் ரோடு சூப்பர் கார்

6.2 லிட்டர் வி8 எஞ்சின் கொண்ட இந்த கார் 1300 கி.கி எடைக் கொண்டது. இரண்டு விதமான உயர கட்டுபாடுகள் கொண்ட இந்த காரை நாம் ஆஃப் ரோடுகளின் தன்மைக்கு தகுந்தவாறு இயக்கலாம்.

518 பிஎச்பி பவருடன் தயாராகும் ஆஃப் ரோடு சூப்பர் கார்

எந்தவிதமான பிடிமானத்திலும் பயணிக்கும் கட்டுமானம், ஆஃப் ரோடுகளுக்கான டயர்கள் மற்றும் பந்தயங்களில் செல்வது போன்ற வேகம் என சேன்ட்ரேஸர் 500 ஜி.டி காரின் செயல்திறன் வியப்பில் ஆழ்த்துகிறது.

518 பிஎச்பி பவருடன் தயாராகும் ஆஃப் ரோடு சூப்பர் கார்

ஏசி வசதி, எல்.சி.டி திரை, மியூசிக் சிஸ்டம், கப் ஹோல்டர்ஸ் மற்றும் இருக்கைகளுக்கான லெதர் வேலைபாடுகள் இந்த காரில் அம்சமாக இருக்கும். மேலும் இதை நாம் ஆன்ரோடுகளிலும் ஓட்டலாம்.

518 பிஎச்பி பவருடன் தயாராகும் ஆஃப் ரோடு சூப்பர் கார்

கவர்ந்து இழுக்கும் அம்சங்கள் கொண்ட சேன்ட்ரேஸர் 500 ஜி.டி மாடலில் மொத்தம் 35 எண்ணிக்கையிலான கார்களை மட்டுமே ஜாரூக் மோட்டார்ஸ் தயாரிக்கவுள்ளது.

518 பிஎச்பி பவருடன் தயாராகும் ஆஃப் ரோடு சூப்பர் கார்

ஆஃப்-ரோடுகளுக்கான சூப்பர் கார் என தற்போதே பெயர் பெற்று விட்ட இந்த கார் 4.5 மில்லியன் டாலர் மதிப்பில் விற்பனைக்கு வருகிறது. இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.2.90 கோடி.

518 பிஎச்பி பவருடன் தயாராகும் ஆஃப் ரோடு சூப்பர் கார்

ஃபெராரி மற்றும் லம்போர்கினி ஆஃப் ரோடு கார்கள் போன்று தான் தற்போது ஜாரூக் சேன்ட்ரேஸர் 500 ஜி.டி காரின் பெயரும் சந்தையில் அறியப்பட்டுள்ளது.

ஆனால் கூப் மற்றும் ஆஃப்-ரோடு என இரண்டு காம்பினேஷன்களை ஒருங்கே பெற்றுள்ளதால், இந்த காரின் வடிவம் தனித்துவம் பெறுகிறது.

518 பிஎச்பி பவருடன் தயாராகும் ஆஃப் ரோடு சூப்பர் கார்

செயல் திறன், வடிவமைப்பு மற்றும் முக்கியமாக சிறப்பம்சம் என அனைத்திலும் தகுதியுடன் உள்ள சேன்ட்ரேஸர் 500 ஜி.டி காரை சொந்தமாக்க அதிக பணம் செலவழியும் என்பது மட்டும் உண்மை.

Most Read Articles
English summary
Read in Tami- UAE-based automaker Zarooq Motors has revealed the off-road supercar, the SandRacer 500GT. Click for Details...
Story first published: Tuesday, July 11, 2017, 16:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X