ரூ.1.28 கோடியில் விற்பனைக்கு வந்தது ஆடியின் புதிய கார்

இந்தியாவில் ஆடி ஆர்எஸ்7 கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மும்பையில் நடந்து வரும் நிகழ்ச்சியில் சற்றுமுன் இந்த காரின் முழு விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. விழாவிற்கு சற்று தாமதமாக வந்த பாலிவுட் நடிகர் சல்மான்கான் இந்த காரை முறைப்படி அறிமுகம் செய்தார்.

இந்த புதிய கார் ஆடி ஏ7 செடான் காரின் பெர்ஃபார்மென்ஸ் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இது மெர்சிடிஸ் பென்ஸ் இ63 ஏஎம்ஜி மற்றும் பிஎம்டபிள்யூ எம்5 கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

 டிசைன்

டிசைன்

புதிய அலுமினிய கலவையிலான பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் குறைவான எடை கொண்ட ஸ்போர்ட்ஸ் கூபே ரக காராக இருக்கிறது. ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான பவரையும், கூபே பாடி ஸ்டைலுடன் வடிவமைக்கப்பட்ட கார் மாடல் இது. போட்டியாளர்களைவிட மிகச்சிறப்பான டிசைன் கொண்டது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 560 எச்பி ஆற்றலையும், 700 என்எம் டார்க்கையும் அளிக்கும் 4.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

 பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

ஆடியின் பிரத்யேக குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த புதிய ஆடி கார் 0 - 100 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் எட்டிவிடும் இந்த காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ ஆகும்.

சிறப்பு நுட்பம்

சிறப்பு நுட்பம்

8 சிலிண்டர்கள் அமைப்பு கொண்ட இந்த காரின் எஞ்சினின் 4 சிலிண்டர்கள் தேவைக்கு ஏற்ப செயல்படும். சிலிண்டர் ஆன் டிமான்ட் என்ற இந்த நுட்பத்தின் மூலம், குறைந்த கார்பன் புகையை வெளியிடும் தன்மை கொண்டதாகவும், அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதாகவும் இருக்கும்.

விலை

விலை

ரூ.1,28,56,000 விலையில் இந்த கார் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இறக்குமதி செய்து விற்பனைக்கு செய்யப்படும்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X