இந்தியாவில் ஆடி ஆர்எஸ்-5 கூபே கார் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் புதிய ஆடி ஆர்எஸ்-5 கூபே ரக கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆடியின் ஏ-5 காரின் பெர்ஃபார்மென்ஸ் மாடலான இந்த காரின் டீசர் சமீபத்தில் ஆடியின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று நடந்த விழாவில் இந்த புதுப்பிக்கப்பட்ட மாடலை ஆடியின் தலைவர் மைக்கேல் பெர்ஷகே மற்றும் ஆடியின் ரேஸ் டிரைவர் ஆதித்யா பட்டேல் அறிமுகம் செய்தனர். கூடுதல் விபரங்கள், அறிமுக விழா படங்களை ஸ்லைடரில் காணலாம்.

அறிமுக விழா

அறிமுக விழா

ஆடி இந்தியா தலைவர் மைக்கேல் பெர்ஷகே, ஆடியின் ரேஸ் டிரைவர் ஆதித்யா பட்டேல் ஆகியோர் இந்த காரை அறிமுகம் செய்து வைத்தனர்.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 450 எச்பி ஆற்றலையும், 430 என்எம் டார்க்கை அளிக்கும் 4.2 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. .

குவாட்ரோ சிஸ்டம்

குவாட்ரோ சிஸ்டம்

ஆடியின் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருப்பதால், எஞ்சினிலிருந்து 40 சதவீத சக்தி முன்சக்கரங்களுக்கும், 60 சதவீத சக்தி பின் சக்கரங்களுக்கும் செலுத்தப்படும்.

உந்துசக்தி

உந்துசக்தி

இந்த கார் 4.6 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை தொட்டுவிடும்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு அதிகபட்சம் 280 கிமீ வேகம் வரை செல்லும். 120 கிமீ வேகத்தை தாணடும்போது இதன் ரியர் ஸ்பாய்லர் தானியங்கி முறையில் இயங்கி காருக்கு அதிக சமநிலையை கொடுக்கும்.

 சிறிய மாற்றங்கள்

சிறிய மாற்றங்கள்

முன்பக்க, பின்புற பம்பர்கள், ரியர் ஸ்பாய்லர், இன்டிரியர் மாற்றங்களை கண்டுள்ளது.

சிறிய மாற்றங்கள்

சிறிய மாற்றங்கள்

முன்பக்க, பின்புற பம்பர்கள், ரியர் ஸ்பாய்லர், இன்டிரியர் மாற்றங்களை கண்டுள்ளது.

இதர வசதிகள்

இதர வசதிகள்

எல்இடி ஹெட்லைட் மற்றும் பகல் நேர ரன்னிங் விளக்குகள், பல வசதிகள் கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், சாட்டிலைட் நேவிகேஷன், ஐபாட் கனெக்ட்டிவிட்டி என ஏராளமான புதிய வசதிகளை கொண்டிருக்கிறது.

விலை

விலை

மும்பையில் ரூ.95.28 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டெல்லியில் ரூ.96.81 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

Most Read Articles
English summary
German luxury car maker Audi has launched powerful RS5 Coupe at INR 95.28 lakhs in Indian market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X