மணிக்கு 330 கிமீ வேகத்தில் பறக்கும் புதிய பென்ட்லீ கார் அறிமுகம்!

By Saravana

இந்தியாவில் மணிக்கு அதிகபட்சம் 330 கிமீ வேகத்தில் செல்லும் கான்டினென்டல் ஜிடி ஸ்பீடு என்ற புதிய சூப்பர் பாஸ்ட் காரை பென்ட்லீ அறிமுகம் செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூனில் இந்த கார் சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. சொகுசுக்கும், வேகத்துக்கும் புகழ்பெற்ற பென்ட்லீயின் கான்டினென்டல் வரிசையில் வந்துள்ள இந்த புதிய காரில் ட்வின் டர்போசார்ஜ்டு டபிள்யூ12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

Bentley Continental GT Speed

இந்த எஞ்சின் அதிகபட்சம் 616 பிஎச்பி பவரையும், 800 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 8 ஸ்பீடு இசட்எப் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த ட்ரான்ஸ்மிஷன் 12 சதவீதம் வரை அதிக மைலேஜை தரும் என்கிறது பென்ட்லீ.

இந்த வேகத்தை எளிதாக எட்டும் வகையி்ல ஸ்டீயரிங் சிஸ்டம், சஸ்பென்ஷன், சேஸிஸ் என அனைத்தும் புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகின் வெற்றிகரமான டபிள்யூ12 எஞ்சினை தயாரிக்கும் நிறுவனம் என்ற பெயர் பென்ட்லீக்கு உண்டு. பென்ட்லீயின் அத்தகைய சிறப்பு வாய்ந்த எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Bentley Motors, the British super luxury brand has added its fastest ever car, the Continental GT Speed, in to its Indian line up. Bentley Motors' Indian importer Exclusive Motors has launched the Continental GT Speed in India priced at INR 2 crores.
Story first published: Thursday, February 14, 2013, 10:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X