இந்தியாவிலும் ஐ3 அறிமுகம் செய்யப்படும்: பிஎம்டபிள்யூ அதிகாரி தகவல்

இந்தியாவில் ஐ3 எலக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டம் இருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. இந்த சொகுசு எலக்ட்ரிக் கார் ஆசியா(சீனா), ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய 3 கண்டங்களில் நேற்று ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போது, பிஎம்டபிள்யூவின் போர்டு உறுப்பினர் ஹரால்டு குரூகரிடம், "இந்தியாவில் இந்த புதிய எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில்," இந்தியாவில் பிஎம்டபிள்யூ ஐ3 காருக்கு சிறப்பான மார்க்கெட் இருக்கிறது.

எனவே, இந்த புதிய காரை இந்தியாவில் நிச்சயம் விற்பனைக்கு கொண்டு வருவோம். அதற்கான கால அளவு எதையும் இப்போது தெரிவிக்க இயலாது. கடந்த வாரம் டெல்லியில் நான் இருந்தபோது எலக்ட்ரிக் கார் விற்பனைக்கான முக்கியத்துவம் மற்றும் சலுகைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் விவாதித்தேன்.

அதற்கு முன்னதாக அங்கு (இந்தியாவில்) எலக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜ் ஏற்றுவதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார். பிஎம்டபிள்யூ ஐ3 குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கார்பன் ஃபைபர் பாடி

கார்பன் ஃபைபர் பாடி

இந்த காரில் 50 சதவீதம் அளவுக்கு கார்பன் ஃபைபர் பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் எடை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ இதுவரை தயாரித்த உற்பத்தி நிலை கார்களில் அதிக அளவு கார்பன் ஃபைபர் பயன்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.

மறுசுழற்சி பாகங்கள்

மறுசுழற்சி பாகங்கள்

இந்த கார் 1,200 கிலோ எடை கொண்டது. இதில், பேட்டரியின் எடை 236 கிலோ எடை கொண்டது. இதில், விஷேசம் என்னவெனில், இந்த காரின் 80 சதவீத பாகங்களை மறுசுழற்சி செய்ய முடியும் என்பதுதான்.

எலக்ட்ரிக் மோட்டார்

எலக்ட்ரிக் மோட்டார்

இந்த காரில் 164 பிஎச்பி சக்தியை அளிக்கும் பவர்ஃபுல் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

சார்ஜ்

சார்ஜ்

ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த காரில் 130 கிமீ வரை செல்ல முடியும். ஆனால், பேட்டரியை நம்பி இராமல் கூடுதல் பெட்ரோல் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கிறது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த கார் 4 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது.

சாட்நவ் சிஸ்டம்

சாட்நவ் சிஸ்டம்

சாட்நவ் சிஸ்டம் மூலம் அருகிலுள்ள சார்ஜ் நிலையங்கள் பற்றிய விபரம், பேட்டரி சார்ஜ் நிலவரம் போன்ற பல்வேறு தகவல்களை பெற முடியும்.

ஒருமுறை சார்ஜ் செய்ய...

ஒருமுறை சார்ஜ் செய்ய...

இதில் பொருத்தப்பட்டிருக்கும் லித்தியம் அயான் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்வதற்கு 6 மணி நேரம் பிடிக்கும்.

வேரியண்ட்கள்

வேரியண்ட்கள்

ஸ்டான்டர்டு, லாஃப்ட், லாட்ஜ் மற்றும் சூட் ஆகிய 4 வேரியண்ட்களில் கிடைக்கும்.

விலை

விலை

ஐரோப்பாவில் 35,000 யூரோ விலையிலும், அமெரிக்காவில் 41,350 டாலர் விலையிலும் விற்பனைக்கு வருகிறது. சீனாவில் இந்த காருக்கான விலை விபரம் அறிவிக்கப்படவில்லை.

Most Read Articles
English summary
BMW has launched production version i3 electric car in 3 continents yesterday.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X