மேம்படுத்தப்பட்ட புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 விற்பனைக்கு வந்தது

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 கார் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. முகப்பு டிசைனில் மாற்றங்களுடன், கூடுதல் வசதிகளுடன் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.

மேலும், ஒரே ஒரு டீசல் எஞ்சின் ஆப்ஷனில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் வசதிகளை பொறுத்து இரு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 மூன்றாம் தலைமுறை

மூன்றாம் தலைமுறை

2003ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கடந்த 2011ல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் எக்ஸ்3 மூன்றாம் தலைமுறை மாடலாகும். இந்த ஆண்டு துவக்கத்தில் ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆடி க்யூ5, வால்வோ எக்ஸ்சி60 ஆகிய மாடல்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும்.

டீசல் எஞ்சின்

டீசல் எஞ்சின்

இந்த புதிய எக்ஸ்3 காரில் 190 எச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இசட்எஃப் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

மைலேஜ், டாப்ஸ்பீடு

மைலேஜ், டாப்ஸ்பீடு

இந்த புதிய கார் லிட்டருக்கு 18.56 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. 0- 100 கிமீ வேகத்தை 8.1 வினாடிகளில் எட்டும் இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 210 கிமீ வேகம் செல்லும் வலிமை கொண்டது.

வசதிகள்

வசதிகள்

பானரோமிக் சன்ரூஃப், அலுமினியம் ரூஃப் ரெயில், ஸ்போர்ட் லெதர் ஸ்டீயரிங் வீல், 7 சேனல் ஸ்பீக்கர் சிஸ்டம், 18 இஞ்ச் அலாய் வீல்கள், லெதர் அப்ஹோல்ஸ்டரி போன்றவை டாப் வேரியண்ட்டில் கிடைக்கும்.

 விலை விபரம்

விலை விபரம்

பேஸ் மாடல் ரூ.44.9 லட்சத்திலும், டாப் மாடல் ரூ.49.9 லட்சத்திலும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

Most Read Articles
English summary
German luxury carmaker BMW has launched the updated version of its new X3 priced up to Rs 49.9 lakh (ex-showroom Delhi).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X