டாடா கையில் ஜேஎல்ஆர் இருப்பது பெருமையளிக்கிறது: இங்கிலாந்து பிரதமர் கேமரூன்

David Cameron
"டாடா மோட்டார்ஸ் கையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் செயல்படுவது பெருமையளிக்கும் விஷயம்," என இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.

இந்தியாவில் மூன்று நாள் சுற்றுப் பயணமாக வந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடந்த பணியாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது, இங்கிலாந்து, இந்தியா இடையிலான வர்த்தக உறவுகளுக்கு வானமே எல்லை என்று குறிப்பிட்டார்.

மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பற்றி பெருமையாக கூறினார். கூட்டத்தில் பேசிய டேவிட் கேமரூன் கூறியதாவது," ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் தயாரிப்பு நிறுவனங்கள் டாடா மோட்டார்ஸ் வசம் இருப்பது மிகவும் பெருமையளிக்கிறது.

மிகவும் சிக்கலான சமயத்தில் இருந்த இந்த இரு நிறுவனங்களையும் டாடா மோட்டார்ஸ் தைரியத்துடன் கை கொடுத்து தூக்கி நிறுத்தியிருக்கிறது. இன்று ஜாகுவார் லேண்ட்ரோவர் நிமிர்ந்து நிற்பதற்கு டாடா மோட்டார்ஸ் மேற்கொண்ட முயற்சிகள் முக்கிய காரணம்.

மேலும், இங்கிலாந்து சிறந்த பொருளாதார கொள்கையுடன் சிறந்த வர்த்தக வாய்ப்புகளை கொண்டிருக்கிறது. வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மனதார வரவேற்கிறோம்," என்றார்.

இதனிடையே, இங்கிலாந்தில் ஆட்டோமொபைல் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களுடன் டேவிட் கேமரூன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X