மிக சவாலான விலையில் விற்பனைக்கு வந்த செவர்லே என்ஜாய்

கடும் சவாலான விலையில் செவர்லே என்ஜாய் எம்பிவி கார் டெல்லியில் நடந்த விழாவில் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் செவி என்ஜாய் கிடைக்கும்.

பெட்ரோல் மாடலில் 104 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் எஞ்சினுடனும், டீசல் மாடல் 77 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் எஞ்சினுடனும் கிடைக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் தலா 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

Chevrolet Enjoy

மாருதி எர்டிகா, மஹிந்திரா ஸைலோ எம்பிவி கார்களுக்கு போட்டியாக இருக்கும். இதில், 8 சீட்டர் பேஸ் வேரியண்ட்டில் சாதாரண இருக்கைகள் கொண்டதாக கிடைக்கும். வேரியண்ட்களின் விலை விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

விலை விபரம்

பெட்ரோல் வேரியண்ட்கள்

எல்எஸ்(8 சீட்டர்) : ரூ.5.49 லட்சம்

எல்எஸ்(7 சீட்டர்) : ரூ.5.64 லட்சம்

எல்டி(7 சீட்டர்) : ரூ.6.31 லட்சம்

எல்டிஇசட்(7சீட்டர்): ரூ.6.99 லட்சம்

டீசல் வேரியண்ட்கள்

எல்எஸ்(8 சீட்டர்) : ரூ.6.69 லட்சம்

எல்எஸ்(7சீட்டர்) : ரூ.6.75 லட்சம்

எல்டி(7 சீட்டர்) : ரூ.7.42 லட்சம்

எல்டிஇசட்(7 சீட்டர்) : ரூ.7.99 லட்சம்

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X