மே 9ல் என்ஜாய் எம்பிவி காரை அறிமுகப்படுத்துகிறது செவர்லே

By Saravana

அடுத்த மாதம் 9ம் தேதி என்ஜாய் எம்பிவி காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வருகிறது செவர்லே.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீன பார்ட்னரான ஷாங்காய் இன்டஸ்ட்ரி ஆட்டோமோட்டிவ் கார்ப்பரேஷன் (SAIC) விற்பனை செய்து வரும் உல்லிங் ஹாங்குவாங் எம்பிவி அடிப்படையில் என்ஜாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எம்பிவி கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும்.

Chevy Enjoy

மொத்தம் 6 வேரியண்ட்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. 104 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 76 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது.

இந்த கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் வர இருக்கிறது. 7 சீட்டர் மாடல் கேப்டன் இருக்கைகளுடன், 8 சீட்டர் மாடல் சாதாரண பெஞ்ச் இருக்கைகள் கொண்டதாகவும் இருக்கும்.

ரூ.6 லட்சம் முதல் ரூ.8.5 லட்சம் வரையிலான விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி எர்டிகா, நிசான் எவாலியா உள்ளிட்ட எம்பிவிகளுக்கு இது நேரடி போட்டியை கொடுக்கும்.

Most Read Articles
English summary
American car maker General motors is set to launch Enjoy MPV into the Indian market on 9th May.The new MPV will available in both petrol and diesel.
Story first published: Monday, April 29, 2013, 11:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X